வழிபாடு
மின் விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கும் கொடி மரம், பலிபீடம்.

மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழாவை நடத்த ஆந்திர மாநில அரசு ரூ.4 கோடி நிதி ஒதுக்கீடு

Published On 2022-02-22 02:57 GMT   |   Update On 2022-02-22 02:57 GMT
மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா நேரத்தில் கோவிலில் நடக்கும் 4 கால அபிஷேகம் பக்தர்களுக்கு அனுமதி இன்றி தேவஸ்தானம் சார்பில் மட்டுமே நடத்தப்படும்.
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் பிரம்மோற்சவ விழாவை நடத்த மாநில அரசு ரூ.4 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதுகுறித்து ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் நிர்வாக அதிகாரி பெத்தி.ராஜு கூறியதாவது:-

ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா 24-ந்தேதி பக்த கண்ணப்பர் கொடியேற்றத்துடன் தொடங்கி அடுத்த மாதம் (மார்ச்) 8-ந்தேதி வரை 13 நாட்கள் நடக்கிறது. இதற்காக, மாநில அரசு ரூ.4 கோடி நிதி ஒதுக்கி உள்ளது.

அதையொட்டி கோவில் வளாகத்தில் பல வண்ணங்களில் ரங்கோலி கோலங்கள் வரையப்பட்டுள்ளன. பக்தர்களை கவரும் வகையில் கோவில் முழுவதும் மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. தோரணங்கள், வரவேற்பு நுழைவு வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா நேரத்தில் கோவிலில் நடக்கும் 4 கால அபிஷேகம் பக்தர்களுக்கு அனுமதி இன்றி தேவஸ்தானம் சார்பில் மட்டுமே நடத்தப்படும். வருடாந்திர மகாசிவராத்திரி அன்று ஒருநாள் மட்டும் கோவிலில் ராகு-கேது சர்ப்ப தோஷ நிவாரணப் பூஜை நடக்காது. மற்ற நாட்களில் வழக்கம்போல் நடக்கிறது. பிரம்மோற்சவ விழாநாட்களில் பக்தர்களுக்கு காலை முதல் இரவு வரை அன்னதானம் வழங்கப்படும். பக்தர்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கெொடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News