செய்திகள்
போலிவாக்கம் தரைப்பாலம் மூழ்கி இருப்பதை படத்தில் காணலாம்.

திருவள்ளூர் அருகே போலிவாக்கம் தரைப்பாலம் மூழ்கியது

Published On 2019-12-02 10:18 GMT   |   Update On 2019-12-02 10:18 GMT
திருவள்ளூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று முன்தினம் முதல் தொடர்ந்து மழை வெளுத்து வாங்கியது. இந்த மழையால் போலிவாக்கம் தரைப்பாலம் மூழ்கியது.
திருவள்ளூர்:

திருவள்ளூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று முன்தினம் முதல் தொடர்ந்து மழை வெளுத்து வாங்கியது. இந்த மழையால் திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலையில் உள்ள போலிவாக்கம் தரைப்பாலம் மழைநீரில் மூழ்கியது. இதனால் அவ்வழியே வாகன ஓட்டிகள் ஊர்ந்து செல்கின்றனர். சுமார் 200-க்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளது.

பேரம்பாக்கம் எம்.ஜி.ஆர். நகர் குடியிருப்பு பகுதியில் மழைநீர் சூழ்ந்ததால் அங்கு வசித்த பொதுமக்கள் வீடுகளை காலி செய்து உறவினர் வீடுகளில் தஞ்சமடைந்தனர். பூண்டி ஒன்றியத்துக்குட்பட்ட சென்றான்பாளையம் கிராமத்தில் சுமார் 50 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த சுமார் 50 ஏக்கர் சம்பா பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது.

இதேபோல் நேதாஜி சாலை அருகே உள்ள கல்குளம் பகுதியில் 30-க்கும் மேற்பட்ட குடியிருப்பில் மழைநீர் சூழ்ந்ததால் அப்பகுதி மக்கள் சிரமத்திற்கு ஆளாகினர். திருத்தணி நகராட்சிக்கு உட்பட்ட வள்ளிநகரில் கூலி வேலை செய்து வரும் கோகிலாவின் வீட்டின் சுவர் திடீரென இடிந்து விழுந்தது.

இதில் கோகிலா, அவரது மகன் அக்பர் ஆகியோர் சிக்கினர். அப்பகுதி மக்கள் அக்பரை மட்டும் இடிபாடுகளில் இருந்து மீட்டனர். கோகிலாவை மீட்க முடியவில்லை. தீயணைப்பு வீரர்கள் வந்து 2 மணி நேரம் போராடி கோகிலாவை மீட்டனர். அவருக்கு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Tags:    

Similar News