ஆன்மிகம்
கொடிமரத்திற்கு தங்க தகடுகள் பதிக்கும் பணி தருமபுரம் ஆதீனம் முன்னிலையில் தொடங்கிய போது எடுத்த படம்.

வைத்தீஸ்வரன் கோவிலில், கொடிமரத்திற்கு தங்கத்தகடுகள் பதிக்கும் பணி தொடக்கம்

Published On 2021-09-04 05:11 GMT   |   Update On 2021-09-04 05:11 GMT
தங்க பத்ம பீடத்தினை கற்பக விநாயகர், மூலவர் வைத்தியநாதசாமி, தையல் நாயகி அம்மன், செல்வ முத்துக்குமாரசாமி ஆகிய சன்னதிகள் முன்பு வைத்து சிறப்பு பூஜைகள் செய்து பத்ம பீடத்திற்கு தீபாராதனை காட்டப்பட்டது.
சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான தையல்நாயகி அம்மன்- வைத்தியநாதசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் தனி சன்னதியில் செல்வமுத்துக்குமாரசுவாமி, நவகிரகங்களில் செவ்வாய்க்கு அதிபதியான அங்காரகன், தன்வந்திரி சுவாமிகள் அருள்பாலிக்கின்றனர்.

இந்தநிலையில் இந்த கோவிலில் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகாசன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் அருளாசியின்படி, வைத்தியநாதசாமி சன்னதி நேர் எதிரே உள்ள கொடிமரத்திற்கு தங்கத்தகடுகள் பதிக்கும் திருப்பணி தொடங்கி நடைபெற்று வந்தது.

இந்தநிலையில் கொடி மரத்திற்கு தங்க தகடுகள், பத்மபீடம் ஆகியவை தயார் செய்யப்பட்டு அவற்றை கொடிமரத்தில் பொருத்தும் பணி நேற்று தொடங்கியது.

முன்னதாக தங்க பத்ம பீடத்தினை கற்பக விநாயகர், மூலவர் வைத்தியநாதசாமி, தையல் நாயகி அம்மன், செல்வ முத்துக்குமாரசாமி ஆகிய சன்னதிகள் முன்பு வைத்து சிறப்பு பூஜைகள் செய்து பத்ம பீடத்திற்கு தீபாராதனை காட்டப்பட்டது.

அதன்பின்னர் தங்க ரேக் மற்றும் தங்க பத்ம பீடம் கொடிமரத்தில் பொருத்தும் பணி தொடங்கியது. இதில் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகாசன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பங்கேற்றார். அப்போது கோவில் கட்டளை திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமிகள் உடனிருந்தார்.
Tags:    

Similar News