ஆன்மிகம்
திருப்பதி ஏழுமலையான் கோவில் புஷ்கரணியில் சக்கர ஸ்நானம்

திருப்பதி ஏழுமலையான் கோவில் புஷ்கரணியில் சக்கர ஸ்நானம்

Published On 2021-09-20 05:58 GMT   |   Update On 2021-09-20 05:58 GMT
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அனந்த பத்மநாபசாமி விரத பூஜையை முன்னிட்டு சுதர்சன சக்கரத்தாழ்வாருக்கு பால், தயிர், தேன், இளநீர், மஞ்சள், சந்தனத்தால் அபிஷேகம் செய்யப்பட்டது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பாத்ரபாதம் மாதத்தில் சுக்ல பட்ச சதுர்த்தசி திதி அன்று அனந்த பத்மநாபசாமி விரத பூஜை நடப்பது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டுக்கான அனந்த பத்மநாபசாமி விரத பூஜை நேற்று காலை சதுர்த்தசி திதியில் நடந்தது.

விரத பூஜை முடிந்ததும் உற்சவர் சுதர்சன சக்கரத்தாழ்வார் கோவிலில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு வராகசாமி கோவில் அருகில் புஷ்கரணி கரையில் வைக்கப்பட்டார். அங்கு சுதர்சன சக்கரத்தாழ்வாருக்கு பால், தயிர், தேன், இளநீர், மஞ்சள், சந்தனத்தால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் புஷ்கரணி புனிதநீரில் சுதர்சன சக்கரத்தாழ்வாரை மூன்று முறை மூழ்கி எடுத்து சக்கர ஸ்நானம் செய்விக்கப்பட்டது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவின் 9-வதுநாள், வைகுண்ட துவாதசி, ரத சப்தமி மற்றும் அனந்த பத்மநாபசாமி விரத பூஜை ஆகிய நாட்களில் மட்டுமே ஸ்ரீவாரி புஷ்கரணியில் சக்கர ஸ்நானம் நடப்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News