செய்திகள்
மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டுக்கே சென்று தடுப்பூசி போடப்படும்

மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டுக்கே சென்று தடுப்பூசி போடப்படும்: மத்திய அரசு அறிவிப்பு

Published On 2021-09-24 02:34 GMT   |   Update On 2021-09-24 02:34 GMT
பண்டிகை காலங்களில், கட்டுப்பாட்டு மண்டலங்களிலும், தொற்று பாதிப்பு 5 சதவீதத்துக்கு மேல் உள்ள மாவட்டங்களிலும் கூட்டமாக திரள தடை விதிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி :

மத்திய சுகாதாரத்துறை அமைச்சக செயலாளர் ராஜேஷ் பூஷண், நிதி ஆயோக் (சுகாதாரம்) உறுப்பினர் டாக்டர் வி.கே.பால் ஆகியோர் நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு கூட்டாக பேட்டி அளித்தனர். அவர்கள் கூறியதாவது:-

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், நாம் இன்னும் கொரோனா 2-அலையின் பிடியில்தான் இருக்கிறோம். கடந்த வாரம் தொற்று பாதித்தவர்களில் 62.73 சதவீதம் பேர், கேரளாவை சேர்ந்தவர்கள். அந்த மாநிலத்தில் மட்டும்தான் சிகிச்சை பெற்று வருபவர்கள் ஒரு லட்சத்துக்கு மேற்பட்டோர் உள்ளனர். பண்டிகை காலங்களில், கட்டுப்பாட்டு மண்டலங்களிலும், தொற்று பாதிப்பு 5 சதவீதத்துக்கு மேல் உள்ள மாவட்டங்களிலும் கூட்டமாக திரள தடை விதிக்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகள், நடமாட முடியாதவர்களுக்கு வீட்டுக்கே சென்று தடுப்பூசி செலுத்தப்படும். 18 வயதுக்கு மேற்பட்டோரில் இதுவரை 66 சதவீதம்பேர் ஒரு டோஸ் தடுப்பூசியாவது போட்டுள்ளனர். 23 சதவீதம்பேர், 2 டோசும் போட்டுள்ளனர். இது இந்தியாவின் முக்கியமான மைல்கல்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.
Tags:    

Similar News