உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

வாடகை செலுத்தாவிட்டால் கடைகளுக்கு சீல்வைப்பு - காங்கயம் நகராட்சி ஆணையர் எச்சரிக்கை

Published On 2021-12-24 09:21 GMT   |   Update On 2021-12-24 09:21 GMT
நகராட்சி ஆணையர் உத்தரவின்படி, மேற்கண்ட 2 கடைகளையும் நகராட்சி அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.
காங்கயம்:

காங்கயம் நகராட்சிக்குச் சொந்தமான கடைகளுக்கு உரிய வாடகை செலுத்தாவிட்டால் கடைகளைப் பூட்டி சீல் வைக்கப்படும் என நகராட்சி நிர்வாகம் அறிவிப்பு செய்திருந்தது. 

இதில் காங்கயம் பேருந்து நிலையம் அருகே, தினசரி சந்தைப்பகுதியில் உள்ள ஒரு கடை ரூ.98 ஆயிரம், மற்றொரு கடை ரூ.1 லட்சத்து 52 ஆயிரம் வாடகை பாக்கி வைத்திருந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் நகராட்சி ஆணையர் உத்தரவின்படி, மேற்கண்ட 2 கடைகளையும் நகராட்சி அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.

இதுகுறித்து காங்கயம் நகராட்சி ஆணையர் எஸ்.வெங்கடேஸ்வரன் கூறியபோது:

காங்கயம் நகராட்சி கடைகளுக்கு நவம்பர் 2021 வரை வாடகை பாக்கி நிலுவையில் உள்ள கடைக்காரர்கள் வாடகைத் தொகையினை உடனே நகராட்சி அலுவலகத்தில் செலுத்தவும். தவறும் பட்சத்தில் கடைகளைப் பூட்டி ‘சீல்’ வைக்கப்படும், என்றார்.
Tags:    

Similar News