பெண்கள் மருத்துவம்
குழந்தையின்மை பிரச்சினை

குழந்தையின்மை பிரச்சினைக்கு எப்போது டாக்டரை அணுகுவது?

Published On 2022-04-11 06:09 GMT   |   Update On 2022-04-11 06:09 GMT
இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி மருத்துவத் துறையில் பல நல்ல மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளன. இதனால் தீர்க்க முடியாமல் சவாலாக இருந்த பல நோய்களையும் இன்று எளிதாக குணமடைய செய்ய முடிகிறது.
உங்களுக்கு இருக்கும் குழந்தையின்மை பிரச்சினையை நீங்கள் புரிந்து கொண்டவுடன் டாக்டரை சரியான நேரத்தில் அணுகி உங்கள் பிரச்சினைக்கு ஒரு நல்ல தீர்வு பெற முயல்வது முக்கியம். தம்பதிகள் இந்த விஷயத்தில் தயக்கம் காட்டக்கூடாது. நீங்கள் எப்போது டாக்டரை அணுகவேண்டும் என்பதற்கு இங்கே சில குறிப்புகளை தந்து உள்ளேன்.

ஆண்/பெண் வயது 35 முதல் 40 இருந்தாலோ, மாதவிடாய் சீராக வரவில்லை என்றாலோ அல்லது மாதவிடாயே ஏற்படவில்லை என்றாலோ, மாதவிடாய் அதிக வலியோடு ஏற்பட்டாலோ கருவுறுவதில் பிரச்சினைகள் இருப்பதை நீங்கள் உணர்ந்தாலோ, உங்கள் குடும்பத்தினரில் யாருக்காவது மரபு வழி கருவுறாமைக்கான பிரச்சினை இருந்தாலோ டாக்டரை அணுகி மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது.

இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி மருத்துவத் துறையில் பல நல்ல மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளன. இதனால் தீர்க்க முடியாமல் சவாலாக இருந்த பல நோய்களையும் இன்று எளிதாக குணமடைய செய்ய முடிகிறது. இந்த வகையில் கருவுறாமைக்கான காரணங்களை சரியாக கண்டறிந்து அதற்கான சரியான சிகிச்சை முறையையும் தேர்ந்தெடுத்து உங்கள் பிரச்சினையை சரி செய்து கொள்ள முடியும். இந்த வகையில் பல சிகிச்சை முறைகள் இன்று வழக்கத்தில் உள்ளன.

இன்விட்ரோ பெர்டிலைஷேசன் (ஐ.வி.எப்.)

இந்த ஐ.வி.எப். சிகிச்சை முறையில் கருமுட்டைகள் சேகரிக்கப்பட்டு உடலுக்கு வெளியே ஆய்வகத்தில் கருவகத்தட்டில் வைக்கப்பட்டு விந்தணுவுடன் சேர்க்கப்பட்டு கருவுற செய்யப்படுகிறது. இப்போது அதிக மக்கள் இந்த சிகிச்சை முறையில் பயன் பெற்று வருகிறார்கள் என்பது உண்மை.

இவ்வாறு அன்னை மருத்துவமனை டாக்டர்கள் ஜோ.புல்கானின், பி.ஜி.சுதா கூறினார்கள்.
Tags:    

Similar News