உள்ளூர் செய்திகள்
ஜிகே வாசன்

கொரோனாவை கட்டுப்படுத்த மதுக்கடைகளை உடனே மூடவேண்டும்- ஜி.கே.வாசன்

Published On 2022-01-11 08:52 GMT   |   Update On 2022-01-11 08:52 GMT
கொரோனாவை கட்டுப்படுத்த ஜனவரி 20-ந்தேதி வரை மதுக்கடைகளை முழுவதுமாக மூட வேண்டும் என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை:

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

உலகம் முழுவதும் தற்போது கொரோனாவின் 3-வது அலை வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் அதிவேகமாக பரவி வருகிறது. இவை மக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கொரோனாவின் 3-வது அலை பரவாமல் இருப்பதற்காக தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு, மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் முழு ஊரடங்கு அறிவித்து இருப்பதும், வழிபாட்டு தலங்கள் வெள்ளி, சனிக்கிழமைகளில் மூட வேண்டும் என்று அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

ஆனால் டாஸ்மாக் கடைகளுக்கு மட்டும் எந்தவிதமான கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை. தற்போது தமிழகத்தில் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகையால் 3 நாட்கள் தொடர் விடுமுறைகள் வருகிறது. அதனால் மதுக்கடைகளில் அதிகமாக மக்கள் கூடுவதற்கு வாய்ப்புள்ளது. ஆகவே ஜனவரி 20-ந்தேதி வரை மதுக்கடைகளை முழுவதுமாக மூடவேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News