செய்திகள்
கோப்புபடம்

திருப்பூரில் பூக்கள் விலை கிடுகிடு உயர்வு

Published On 2021-07-16 09:32 GMT   |   Update On 2021-07-16 09:32 GMT
பொதுமக்கள் அதிகமாக வந்து தங்களுக்கு தேவையான பூக்கள் மற்றும் காய்கறிகளை வாங்கி சென்றனர்.
திருப்பூர்:

திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள காட்டன் மார்க்கெட்டில் காய்கறிகள் மற்றும் பூக்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நாமக்கல், சேலம், சத்தியமங்கலம், நிலக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் இருந்து இங்கு பூக்கள் கொண்டு வரப்படுகிறது. சில்லரை மற்றும் மொத்த வியாபாரிகளும் பூக்களை வாங்கி வந்து விற்பனை செய்கிறார்கள்.

இந்நிலையில் மார்க்கெட்டில் நேற்று விஷேச நாள் என்பதால் மல்லிகை பூ விலை கிடுகிடுவென உயர்ந்திருந்தது. இதுபோல் மற்ற பூக்களின் விலையும் உயர்ந்திருந்தது. பொதுமக்கள் அதிகமாக வந்து தங்களுக்கு தேவையான பூக்கள் மற்றும் காய்கறிகளை வாங்கி சென்றனர்.

இதுகுறித்து பூ வியாபாரிகள் கூறும்போது, இன்று வெள்ளிக்கிழமை சுபமுகூர்த்த தினம் என்பதால் மல்லிகை பூக்களின் தேவை அதிகமாக உள்ளது. இதனால் பலரும் மல்லிகை பூக்களை வாங்கி சென்றனர். இதனால் நேற்று முன்தினம் ஒரு கிலோ ரூ.300க்கு விற்பனை செய்யப்பட்ட மல்லிகை பூ நேற்று ரூ.300 உயர்ந்து ரூ.600க்கு விற்பனை செய்யப்பட்டது. இதுபோல் மற்ற பூக்களின் விலையும் உயர்ந்துள்ளது. ஒரு கிலோ அரளி ரூ.180க்கும், சம்பங்கி ரூ.80க்கும், செவ்வந்தி ரூ.180க்கும், கோழிகொண்டை ரூ.80க்கும், முல்லை ரூ.320க்கும் விற்பனை செய்யப்பட்டது.
Tags:    

Similar News