ஆன்மிகம்
சொர்ண ஆகர்ஷண பைரவர்

தாடிக்கொம்புவில், தேய்பிறை அஷ்டமியையொட்டி சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு சிறப்பு பூஜை

Published On 2021-08-31 07:52 GMT   |   Update On 2021-08-31 07:52 GMT
தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவில் சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு மஞ்சள், சந்தனம், திருமஞ்சனம், அரிசி மாவு, இளநீர், தேன் உள்ளிட்டவற்றால் அபிஷேகம் நடைபெற்றது.
தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் பரிவார மூர்த்திகளில் ஒருவராக சொர்ண ஆகர்ஷண பைரவர் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். நேற்று தேய்பிறை அஷ்டமியையொட்டி சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு சிறப்பு பூஜை, பக்தர்கள் இன்றி நடைபெற்றது.

அப்போது சாமிக்கு மஞ்சள், சந்தனம், திருமஞ்சனம், அரிசி மாவு, இளநீர், தேன் உள்ளிட்டவற்றால் அபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து ராஜ அலங்காரத்தில் சொர்ண ஆகர்ஷண பைரவர் எழுந்தருளினார்.

பூஜை முடிந்த பிறகு சமூக இடைவெளியை கடைபிடித்து பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
Tags:    

Similar News