செய்திகள்
போதையில் தள்ளாடும் கிராமத்து சிறுவன்

போதையில் தள்ளாடும் கிராமத்து சிறுவன்- வைரல் வீடியோவால் பரபரப்பு

Published On 2020-02-18 02:51 GMT   |   Update On 2020-02-18 02:51 GMT
வடக்கு கோவாவில் உள்ள கராப்பூர் என்ற கிராமத்தில் 17 வயதுடைய சிறுவன் ஒருவன் போதையில் பேசும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
பனாஜி:

வடக்கு கோவாவில் உள்ள கராப்பூர் என்ற கிராமத்தில் 17 வயதுடைய சிறுவன் ஒருவன் போதையில் பேசும் அந்த வீடியோவில், ‘தனக்கு 2 இளைஞர்கள் போதைப் பொருட்களை இலவசமாக தந்தனர்’ என்று அந்த சிறுவன் போதையில் கூறினான். சுமார் 5 நிமிடங்கள் அந்த வீடியோ காட்சி இருக்கிறது.

இதுதொடர்பாக போலீசார் அந்த சிறுவனை வலைவீசி தேடிவருகிறார்கள். கராப்பூர் கிராமம், முதல்-மந்திரி பிரமோத் சாவந்தின் தொகுதியான சன்குலிமில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் தான் இருக்கிறது.

மாநிலத்தில் அனைத்து கிராமங்களிலும் போதைப்பொருட்கள் எளிதில் கிடைக்கிறது என்று அந்த மாநில காங்கிரஸ் தலைவர்கள் குற்றம் சாட்டினார்கள். தற்போது அது நிரூபணமாகும் வகையில் அந்த வீடியோ காட்சி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News