செய்திகள்
தா. பாண்டியன்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன் உடல் நல்லடக்கம்

Published On 2021-02-27 10:13 GMT   |   Update On 2021-02-27 10:13 GMT
மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
மதுரை:

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவரும், தேசிய குழு உறுப்பினருமான தா.பாண்டியன் (வயது 89) முதிர்வு காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டார். இதையடுத்து கடந்த 24-ந்தேதி சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். சிறுநீரக பிரச்சினை, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு உபாதைகள் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்கள் எந்தவித பலனையும் அளிக்கவில்லை.

இதனால் தா.பாண்டியன் நேற்று காலை சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். அவரது உடல் தி.நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

அங்கு அவரது உடலுக்கு பல்வேறு கட்சி தலைவர்கள், கம்யூனிஸ்டு கட்சி தொண்டர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள். நேற்று இரவு 7 மணி வரை அவரது உடல் அங்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டு இருந்தது.

அதன் பின்னர் சொந்த ஊரான உசிலம்பட்டி அருகே உள்ள வெள்ளைமலை பட்டிக்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது. 

இந்தநிலையில் உசிலம்பட்டி அருகே வெள்ளைமலைப்பட்டியில் உள்ள பண்ணை தோட்டத்தில் தா. பாண்டியன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. 
Tags:    

Similar News