உள்ளூர் செய்திகள்
டெம்பிள்சிட்டி குமார்.

கையேந்திபவன்களை முறைப்படுத்த கோரிக்கை

Published On 2022-05-07 08:53 GMT   |   Update On 2022-05-07 08:53 GMT
சாலையோர கையேந்திபவன்களை முறைப்படுத்த கோரி மதுரை ஓட்டல்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
மதுரை

மதுரை மாவட்ட ஓட்டல்கள் சங்கத்தலைவர் டெம்பிள் சிட்டி குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சாலையோர கையேந்தி பவன்களில் சுகாதார பிரச்சினைகள் மிக முக்கியமானது. இது உயிருக்கே ஆபத்தாக முடியும். தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் தெருவோர, சாலையோர திடீர் உணவகங்களில் கையாளப்படும் சுகாதார நடைமுறை மிகவும் சீரழிந்தநிலையில் உள்ளது. 

முதலில் சாலையோர கையேந்தி பவன்கள் மிகவும் இடைஞ்சலான இடங்களிலோ, சாக்கடை ஓரங்களிலோ வாகன நெரிசல் இருக்கும் புழுதி பறக்கும் பகுதியிலோ தான் செயல்படுகின்றன. மக்களுக்கு உணவு அளிக்கும் தட்டுக்களை ஒரே வாளி தண்ணீரில் மீண்டும் மீண்டும் கழுவி அடுத்தவர்களுக்கு வழங்கப்படுகின்றன.  முறையற்ற சுத்தப்படு த்தப்படாத குடிநீரும் வாடிக்கை யாளர்களுக்கு வழங்கப்படுகின்றன. இதனால் நோய்த்தொற்று பரவுகின்றன. 

மேலும் வாடிக்கை யாளர்கள் உண்டபின்பு வீசப்படும் இலைகள் மற்றும் கழிவுகள் வீதியிலும், சாலைகளிலும் வீசப்ப டுவதால் மற்றவர்களுக்கு பாதிப்புகள் ஏற்படுகின்றன. மேலும் உணவு தயாரிக்க பயன்படுத்தப்படும் பொரு ட்கள் திறந்த நிலையிலேயே வைத்தும், முதல்நாள் மீதமான பொருட்களை அடுத்த நாளும் வாடிக்கை யாளர்களுக்கு பறிமாறப்படுவதால் ஏற்படும் நோ ய்த்தொற்றினை யார் தடுக்க முடியும்?

எனவே தமிழக அரசும் உணவு தர கட்டுப்பாடு அதிகாரிகளும் இதில் தலையிட்டு கையேந்தி பவன்களில் சுகாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News