ஆன்மிகம்
விநாயகர்

யுகங்களைக் கடந்தவர் விநாயகர்

Published On 2020-08-26 09:52 GMT   |   Update On 2020-08-26 09:52 GMT
விநாயகர் யுகங்களைக் கடந்தவர் என்பதால், காலந்தோறும் அவரை வழிபடுவது பின்பற்றப்பட்டு வருகின்றது. ஒரு காலகட்டத்தில் ஒரு கூட்டத்தினர் கணபதியை மட்டுமே வணங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
ஐந்தாம் நூற்றாண்டுக்குப் பிறகே விநாயகர் வழிபாடு காணப்படுவதாக சான்றுகள் கிடைத்துள்ளன. இருப்பினும் விநாயகர், நான்கு யுகங்களின் அதிபதியாக திகழ்வதாக புராணங்கள் சொல்கின்றன.

அதன்படி கிருதாயுகத்தில் காசிபர் -அதிதி தம்பதிகளின் மகனாகவும் (மகோற்கடர்), திரேதாயுகத்தில் அம்பிகையின் பிள்ளையாக பிறந்து மயிலோடு விளையாடுவதில் நாட்டம் கொண்டவராகவும் (மயுரேசர்), துவாபரயுகத்தில் பரராச முனிவர்- வத்ஸலா தம்பதியினரின் வளர்ப்பு குமாரராகவும் (விக்னராசர்), கலியுகத்தில் சிவன் - பார்வதிதேவியின் மகனாகவும் (விநாயகர்) அவரது பிறப்பு நீண்டுகொண்டே வந்துள்ளது.

யுகங்களைக் கடந்தவர் என்பதால், காலந்தோறும் அவரை வழிபடுவது பின்பற்றப்பட்டு வருகின்றது. ஒரு காலகட்டத்தில் ஒரு கூட்டத்தினர் கணபதியை மட்டுமே வணங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். அத்தகைய வழிபாட்டை ‘காணாபாத்யம்’ என்று குறிப்பிடுவர்.
Tags:    

Similar News