செய்திகள்
கைது

சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கு : மம்தா கட்சி முன்னாள் எம்.பி. கைது

Published On 2021-01-13 19:10 GMT   |   Update On 2021-01-13 19:10 GMT
சட்டவிரோத பண பரிமாற்ற தடுப்பு சட்டத்தின்கீழ் மம்தா கட்சி முன்னாள் எம்.பி. கே.டி.சிங், கைது செய்யப்பட்டுள்ளார்.
புதுடெல்லி:

மேற்கு வங்காள மாநிலத்தை ஆளும் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி. கே.டி.சிங். தற்போது சில காலமாக இவர், கட்சி விவகாரங்களில் தீவிர ஈடுபாடு காட்டவில்லை என கூறப்படுகிறது.

மேலும், ஆல்கெமிஸ்ட் குழுமத்தின் தலைவராக இருந்த இவர் 2012-ல் அந்தப் பதவியில் இருந்து விலகினார்.

இவர் சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக 2 வழக்குகளை அமலாக்கத்துறை இயக்குனரகம் பதிவு செய்துள்ளது.

இந்த நிலையில், கே.டி.சிங், சட்டவிரோத பண பரிமாற்ற தடுப்பு சட்டத்தின்கீழ் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். இந்த தகவலை அமலாக்கத்துறை இயக்குனரக வட்டாரங்கள் தெரிவித்தன.
Tags:    

Similar News