செய்திகள்
மழை

பெரம்பலூர் மாவட்டத்தில் சாரல் மழை

Published On 2021-01-12 10:40 GMT   |   Update On 2021-01-12 10:40 GMT
பெரம்பலூர் மாவட்டத்தில் தற்போது பெய்துவரும் மழையினால் ஏரிகள் மற்றும் நீர்நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சாரல்மழை பரவலாக பெய்து வருகிறது. இந்த நிலையில் பெரம்பலூரில் நேற்று முன்தினம் மாலை சிறிதுநேரம் பலத்த மழை பெய்தது. நேற்று காலை தொடங்கி மாலை வரை இடைவெளிவிட்டு சாரல் மழை பெய்தது.

பெரம்பலூர் மாவட்டத்தில் தற்போது பெய்துவரும் மழையினால் ஏரிகள் மற்றும் நீர்நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மருதையாற்றில் இருந்து துறைமங்கலம் பெரிய ஏரிக்கு நீர்வரத்து தொடங்கி உள்ளது. பெரம்பலூர் நகராட்சி பகுதியில் ரோவர் சாலை, டயானா நகர், ரோஸ்நகர், பாரதிதாசன் நகர், உழவர்சந்தை, வடக்குமாதவி சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள், வீதிகள், காலியாக உள்ள மனைகளில் மழைநீர் தேங்கி உள்ளதால், டெங்கு கொசு உற்பத்தி அதிகரித்து வருகிறது.

மருதையாறு, கோனேரி ஆறு ஆகிய காட்டாறுகளில் மழைநீர் ஆங்காங்கே தேங்கி உள்ளது. சுவேத நதி மற்றும் கல்லாறு இவற்றின் தொடர்ச்சியான வெள்ளாறு ஆகியவற்றில் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. பெரம்பலூர் சுற்றுப்புற வட்டாரங்களில் பெய்துவரும் சாரல் மழையினால் மக்காச்சோளம், பருத்தி போன்ற பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

நேற்று காலை 8 மணி வரை இம்மாவட்டத்தில் பதிவான மழை அளவு மில்லிமீட்டரில் வருமாறு;-

செட்டிகுளம்-2, பாடாலூர்-5, அகரம்சிகூர்-10, லெப்பைக்குடிகாடு-10, புதுவேட்டக்குடி-12, பெரம்பலூர்-5, எறையூர்-5, கிருஷ்ணாபுரம்-3, தழுதாழை-4, வி.களத்தூர்-5, வேப்பந்தட்டை-5.
Tags:    

Similar News