செய்திகள்
அசாதுதீன் ஓவைசி

ஐதராபாத் தேர்தல் பிரசாரத்திற்கு டிரம்ப் மட்டும்தான் இன்னும் வரவில்லை - ஒவைசி பேச்சு

Published On 2020-11-29 11:18 GMT   |   Update On 2020-11-29 12:35 GMT
ஐதராபாத் மாநகரட்சி தேர்தல் டிசம்பர் 1-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான பிரசாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஐதராபாத்: 

தெலுங்கானா மாநிலத்தில் 150 வார்டுகளை கொண்ட ஐதராபாத் மாநகராட்சிக்கான தேர்தல் டிசம்பர் 1-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் முடிவுகள் டிசம்பர் 4-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. 

இந்த தேர்தலில் வெற்றிபெற்று ஐதராபாத் மாநகராட்சி மேயர் மற்றும் உறுப்பினர் பதவியை கைப்பற்றும் நோக்கத்தோடு தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, காங்கிரஸ், பாஜக, அசாதுதீன் ஓவைசியின் அனைத்திந்திய மஜ்லிஸ்  இ  இத்திஹாதுல் முஸ்லிமீன் (எஐஎம்ஐஎம்) உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன.

இன்றுடன் பிரசாரம் நிறைவடைவதையடுத்து ஒவ்வொரு கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

குறிப்பாக பாஜக சார்பில் கட்சியின் தேசிய தலைவர்கள் முதல் பல்வேறு மாநில முதல்மந்திரிகளும் ஐதராபாத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று உத்தரபிரதேச மாநில முதல்மந்திரி யோகி ஆதித்யநாத் பிரசாரத்தில் ஈடுபட்டார். அதேபோல் இன்று உள்துறை மந்திரி அமித்ஷா பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். 

இதனால், ஐதாராபாத் மாநகராட்சி தேர்தல் பாராளுமன்ற தேர்தலை போல பரபரப்பாக பேசப்படுகிறது.

இந்நிலையில், எஐஎம்ஐஎம் கட்சி தலைவரும் ஐதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஓவைசி நேற்று பிரசார நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:-

இது ஐதராபாத் தேர்தல் போன்று இல்லை. நாம் ஏதே நரேந்திரமோடிக்கு பதிலாக பிரதமர் பதவிக்கு வேறு ஒருவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் போல உள்ளது. 

கர்வானில் நான் பிரசாரத்தில் ஈடுபட்டபோது அனைவரும் இங்கு அழைக்கப்பட்டுள்ளனர் என்று கூறினேன். அப்போது அவர்கள் டிரம்பையும் இங்கு அழைக்கவேண்டும் என ஒரு சிறுவன் கூறினான். அவன் கூறியது சரிதான். டிரம்ப் மட்டும் தான் இன்னும் வரவில்லை.   

என்றார்.
Tags:    

Similar News