செய்திகள்
அரவிந்த் கெஜ்ரிவால்

பஞ்சாப் மாநில பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000: கெஜ்ரிவால் வாக்குறுதி

Published On 2021-11-22 10:43 GMT   |   Update On 2021-11-22 10:43 GMT
பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சி அமைத்தால் ஒவ்வொரு பெண்களுக்கும் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்த வருடம் தேர்தல் நடைபெற இருக்கிறது. டெல்லியில் ஆட்சியை பிடித்துள்ள ஆம் ஆத்மி கட்சி அடுத்ததாக உத்தரகாண்ட், பஞ்சாப் மாநிலத்திலும் வலுவாக காலூன்ற விரும்புகிறது.

இதனால் அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் அடிக்கடி உத்தரகாண்ட், கோவா, பஞ்சாப் மாநிலங்களில் சுற்றுப் பயணம் செய்து வருகிறார். நேற்று உத்தரகாண்ட் சென்றிருந்த நிலையில், இன்று பஞ்சாப் சென்றுள்ளார்.

பஞ்சாப் மாநிலம் மோகாவில் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், ‘‘நாங்கள் 2022-ல் பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சி அமைத்தால், மாநிலத்தில் உள்ள 18 வயதிற்கு மேற்பட்ட ஒவ்வொரு பெண்களுக்கும் தலா ஆயிரம் ரூபாய் மாதந்தோறும் வழங்கப்படும். ஒரு குடும்பத்தில் மூன்று பெண்கள் இருந்தால், மாதந்தோறும் 3 ஆயிரம் பெறலாம். இது உலகின் மிகப்பெரிய பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் திட்டமாக இருக்கும்’’ என்றார்.

Tags:    

Similar News