செய்திகள்
கோப்புபடம்

பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 7 பேர் பலி - 112 பேருக்கு தொற்று

Published On 2021-06-11 14:23 GMT   |   Update On 2021-06-11 14:23 GMT
பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 7 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். புதிதாக 112 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் பெரம்பலூர் வட்டாரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 56 பேரும், வேப்பந்தட்டை வட்டாரத்தில் 23 பேரும், வேப்பூர் வட்டாரத்தில் 19 பேரும், ஆலத்தூர் வட்டாரத்தில்14 பேரும் என மொத்தம் 112 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை மொத்தம் 10,130 ஆக உயர்ந்துள்ளது. இதில் ஏற்கனவே 139 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் கொரோனாவுக்கு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெரம்பலூர் தெற்கு தெருவை சேர்ந்த 60 வயதுடைய முதியவரும், கம்பன் தெருவை சேர்ந்த 80 வயதுடைய மூதாட்டியும், வேப்பந்தட்டை தாலுகா அனுக்கூர் வடக்கு தெருவை சேர்ந்த 73 வயதுடைய முதியவரும், வேப்பந்தட்டை மெயின் ரோட்டை சேர்ந்த 60 வயதுடைய மூதாட்டியும், பெரம்பலூர் தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பெரம்பலூர் பாரதிதாசன் நகரை சேர்ந்த 55 வயதுடைய ஆண் ஒருவரும், கவுல்பாளையம் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த 41 வயதுடைய ஆண் ஒருவரும், திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பெரம்பலூர் வெங்கடேசபுரத்தை சேர்ந்த 54 வயதுடைய பெண் ஒருவரும் என மொத்தம் 7 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 146 ஆக உயர்ந்துள்ளது.

மருத்துவமனைகளில் 8,680 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது 1,304 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனா பாதித்த 62 பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 607 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News