செய்திகள்
வெம்பக்கோட்டையில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது எடுத்த படம்.

வத்திராயிருப்பு அருகே கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2021-01-21 15:41 GMT   |   Update On 2021-01-21 15:41 GMT
வத்திராயிருப்பு அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வத்திராயிருப்பு:

வத்திராயிருப்பு அங்கன்வாடி அலுவலகம் முன்பு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியர்களாக்க வேண்டும். காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு முறையான வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் ஓய்வு பெறும்போது பணிக்கொடையாக ஊழியர்களுக்கு ரூ.10 லட்சம், உதவியாளர்களுக்கு ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

வெம்பக்கோட்டையில் உள்ள குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் முன்பாக அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் எஸ்தர் ராணி தலைமை தாங்கினார். கிளை தலைவர் பொண்ணு லட்சுமி, செயலாளர் மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் கீதா வரவேற்றார்.

இதில் சி.ஐ.டி.யூ. மாவட்ட இணைச்செயலாளர் சாராள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட தலைவர் முருகேசன் நன்றி கூறினார்.

அதேபோல . ராஜபாளையம் புதிய பஸ்நிலையம் அருகே உள்ள சமூக நலத்துறை குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் எதிரே, அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கத்தை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Tags:    

Similar News