ஆட்டோமொபைல்
2020 ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் டீசர்

2020 ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் வெளியீட்டு விவரங்கள்

Published On 2020-03-10 10:15 GMT   |   Update On 2020-03-10 10:15 GMT
ஹூண்டாய் மோட்டார் இந்தியாவின் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் மாடலின் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் தனது வாகனங்களை அப்டேட் செய்து வெளியிடும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. 

கடந்த ஆண்டு வென்யூ, கிராண்ட் ஐ10 நியோஸ் மற்றும் ஆரா சப்காம்பேக்ட் செடான் மாடல்களை வெளியிட்ட ஹூண்டாய் தற்சமயம் புதிய கிரெட்டா மற்றும் 2020 வெர்னா ஃபேஸ்லிஃப்ட் மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய காரில் பி.எஸ். 6 ரக என்ஜின் வழங்கப்பட இருக்கிறது.

புதிய ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் மாடலில் 1.0 லிட்டர், 3 சிலிண்டர், ஜி.டி.ஐ. டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இதே என்ஜின் வென்யூ, கிராண்ட் ஐ10 நியோஸ் மற்றும் ஆரா மாடல்களில் வழங்கப்பட்டுள்ளன. வென்யூ மாடலை போன்றே புதிய வெர்னா மாடலிலும் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.



இதுதவிர புதிய வெர்னா மாடலில் 1.5 லிட்டர், 4 சிலிண்டர் டீசல் என்ஜின் ஆப்ஷனிலும் கிடைக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படலாம் என தெரிகிறது.

புதிய வெர்னா ஃபேஸ்லிஃப்ட் மாடலின் வெளியீட்டை முன்னிட்டு டீசர் புகைப்படம் ஒன்றை ஹூண்டாய் வெளியிட்டு இருக்கிறது. அதன்படி ஃபேஸ்லிஃப்ட் வெர்னா காரில் புத்தம் புதிய கேஸ்கேடிங் கிரில், எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள் வழங்கப்படுகின்றன. காரின் பின்புறத்திலும் எல்.இ.டி. டெயில்லைட்கள் மற்றும் மேம்பட்ட பம்ப்பர்கள் வழங்கப்படலாம் என தெரிகிறது.
Tags:    

Similar News