செய்திகள்
ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ்

இந்திய ரிசர்வ் வங்கி கவர்னருக்கு கொரோனா தொற்று

Published On 2020-10-26 23:41 GMT   |   Update On 2020-10-26 23:41 GMT
இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாசுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

நாடு முழுவதும் பரவி வருகிற கொரோனா வைரஸ் பெருந்தொற்று, இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாசையும் (வயது 63) விட்டு வைக்கவில்லை. அவரையும் கொரோனா வைரஸ் தாக்கி உள்ளது.

இதையொட்டி நேற்று முன்தினம் அவர் டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டார்.

அதில் அவர், “எனக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அறிகுறிகள் இல்லை. நான் நன்றாக இருப்பதாக உணர்கிறேன். என்னோடு சமீபத்தில் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொண்டு விடுங்கள். நான் தனிமைப்படுத்திக்கொண்டு பணிகளை தொடர்கிறேன். ரிசர்வ் வங்கி பணிகள் இயல்பாக நடைபெறும். நான் துணை கவர்னர்களுடனும், பிற அதிகாரிகளுடனும் காணொலி காட்சி, தொலைபேசி வழியாக தொடர்பில் உள்ளேன்” என கூறி உள்ளார்.
Tags:    

Similar News