ஆன்மிகம்
சாத் பூஜை

சூரியக் கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் சாத் விரத பூஜை

Published On 2019-11-04 04:57 GMT   |   Update On 2019-11-04 04:57 GMT
வடமாநிலங்களில் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சாத் விரத பூஜை கொண்டாடப்பட்டு வருகிறது. நீர்நிலைகளில் நின்று சூரியனை வழிபட்டு நன்றி தெரிவிப்பது பொதுமக்கள் வழக்கம்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் சாத் பூஜா பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. சாத் விரத பூஜை என்பது பீகார், உத்தர பிரதேசம், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் பெரிய அளவில் கொண்டாடப்படும் விழாவாகும். சூரியக் கடவுளுக்கும் மற்றும் அவரது மனைவிக்கும் நன்றி சொல்ல நடத்தப்படும் இந்து மத விழா இது. நான்கு நாட்களுக்கு இது நடைபெறும். நான்காவது நாளில் நீர் நிலைகளில் கூடி மக்கள் பூஜை செய்து சூரிய பகவானை வழிபடுவர்.

முதல் நாளில் குளித்து விட்டு சுத்தமாக பாரம்பரிய உணவு வகைகளுடன் விருந்து சமைத்து படைப்பார்கள்.. இரண்டாவது நாள் உண்ணா நோன்பு இருப்பார்கள். மூன்றாவது நாளில் ஆறு, ஏரி, குளம் உள்ளிட்ட நீர் நிலைகளில் நின்றபடி சூரியனை வழிபட்டு அர்கயம் எனப்படும் நீரை கையில் ஏந்தி, அஸ்தமானமாகும் சூரியனுக்கு சமர்பிப்பார்கள்.  

நான்காவது, சூரிய உதயத்தின் போது நீர் நிலைகளில் நின்று பெண்கள் படைப்பார்கள். மூங்கில் சிம்புகள் பின்னப்பட்ட தட்டு அல்லது முறத்தில் காய்கறிகள், பழங்கள் போன்ற இயற்கையில் விளையும் பொருட்களை வைத்து படைப்பார்கள். சன்னமான அரிசி மாவு, நெய், சர்க்கரை கொண்டு தயாரிக்கப்பட்ட சுவையான பதார்த்தை படைத்து உண்பார்கள்.

வடமாநிலங்களில் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சாத் விரத பூஜை கொண்டாடப்பட்டு வருகிறது. நீர்நிலைகளில் நின்று சூரியனை வழிபட்டு நன்றி தெரிவிப்பது பொதுமக்கள் வழக்கம். 
Tags:    

Similar News