செய்திகள்
கலெக்டர் பிரசாந்த் வடநேரே

வவ்வால்கள் பற்றிய வதந்திகளை நம்பி மக்கள் அச்சமடைய வேண்டாம்- கலெக்டர் அறிக்கை

Published On 2020-09-14 14:31 GMT   |   Update On 2020-09-14 14:31 GMT
வவ்வால்கள் பற்றிய வதந்திகளை நம்பி மக்கள் அச்சமடைய வேண்டாம் என்று குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே தெரிவித்துள்ளார்.

நாகர்கோவில்:

குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

தோவாளை, செண்பகராமன்புதூர், பண்டாரபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென வவ்வால்கள் அதிக எண்ணிக்கையில் பறந்ததால் இதுதொடர்பாக வனத்துறை அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.

இது மனிதர்கள் வவ்வால்கள் இருக்கும் வாழ்விடங்களுக்கு தொந்தரவுகளை ஏற்படுத்தும் போது அவை மொத்தமாகப் பறக்கும். இது இயல்பான நிகழ்வுதான்.

மேலும் வவ்வால்கள் மூலம் கொரோனா பரவும் என்பதற்கு எவ்வித அறிவியல்பூர்வமான ஆதாரமும் இல்லை என தெரிவித்துள்ளனர். எனவே பொதுமக்கள் இது போன்ற வதந்திகளை நம்பி எவ்வித அச்சமும் அடைய தேவையில்லை.

பொதுமக்கள் கொரோனா நோய்த் தொற்று அறிகுறிகள் குறித்து அஜாக்கிரதையாக இல்லாமல் உரிய நேரத்தில் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை எடுத்துக் கொண்டு இழப்புகளைத் தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News