ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
மின் விளக்கு அலங்காரத்தில் புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரி அருகே உள்ள புனித யோவான் தேவாலயம் ஜொலிக்கும் காட்சி.

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்கு தயாராகி வரும் தேவாலயங்கள்

Published On 2021-12-22 04:08 GMT   |   Update On 2021-12-22 04:08 GMT
கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு புதுச்சேரியில் தேவாலயங்கள் மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கின்றன.
புதுச்சேரியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகையை கொண்டாட அரசு முழு தளர்வு அறிவித்துள்ளது. இதையொட்டி புதுச்சேரிக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருகின்றனர். இதனால் கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் களை கட்டத்தொடங்கி உள்ளது.

கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது தேவாலயங்கள், வீடுகள் தோறும் அழகிய கிறிஸ்துமஸ் குடில் அமைத்துள்ளனர். கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்கு இன்னும் சில நாட்களே இருப்பதால் கடை வீதிகளில் புத்தாடைகள், கிறிஸ்துமஸ் அலங்கார பொருட்கள், கிறிஸ்துமஸ் நட்சத்திரங்கள், பனிபடர்ந்த சூழலில் அழகிய வெண்பனி பூச்சுடன் உயர்ந்த கிறிஸ்துமஸ் மரங்கள் மற்றும் குடில்களை கிறிஸ்தவர்கள் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.

புதுச்சேரியில் தூய இருதய ஆண்டவர் பசிலிக்கா தேவாலயம், மிஷன் வீதியில் உள்ள ஜென்மராக்கினி தேவாலயம் (சம்பா கோவில்), துய்மா வீதியில் உள்ள புனித மேரி தேவாலயம் (கப்ஸ் கோவில்), அரியாங்குப்பம் புனித ஆரோக்கிய அன்னை தேவாலயம், வில்லியனூர் லூர்து அன்னை ஆலயங்களில் கிறிஸ்துமஸ், புத்தாண்டையொட்டி சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெறுகின்றன.

இதையொட்டி தேவாலயங்கள் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மின்னொளியில் ஜொலிக்கிறது. புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகள் இந்த தேவாலயங்கள் முன்பு நின்று செல்பி எடுத்து மகிழ்கின்றனர்.
Tags:    

Similar News