கிச்சன் கில்லாடிகள்
அன்னாசிப்பழ பார்பிக்யூ

வீட்டிலேயே செய்யலாம் அட்டகாசமான அன்னாசிப்பழ பார்பிக்யூ

Published On 2022-02-17 09:21 GMT   |   Update On 2022-02-17 09:21 GMT
கிரில்லிங் முறையில் அன்னாசிப்பழத்தை கொண்டு தயாரிக்கும் அட்டகாசமான உணவுதான் அன்னாசிப்பழ பார்பிக்யூ. இதை எவ்வாறு செய்யலாம் என்பதை இங்கே பார்க்கலாம்.
பார்பிக்யூ என்பது உணவுப்பொருளை நேரடியாக நெருப்பில் சுட்டு சமைக்கும் முறையாகும். உலகம் முழுவதும் பிரபலமாக இருக்கும் பார்பிக்யூ முறையில் பெரும்பாலும் அசைவ உணவுகளே சமைக்கப்படுகின்றன. அதிலிருந்து மாறுபட்டு கிரில்லிங் முறையில் அன்னாசிப்பழத்தை கொண்டு தயாரிக்கும் அட்டகாசமான உணவுதான் அன்னாசிப்பழ பார்பிக்யூ. இதை எவ்வாறு செய்யலாம் என்பதை இங்கே பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

நன்றாக பழுத்த அன்னாசிப்பழம் - 1
காஷ்மீரி மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
மிளகுதூள் - கால் தேக்கரண்டி
வறுத்து அரைத்த சீரகத்தூள் - அரை தேக்கரண்டி
வெண்ணெய் - 2 தேக்கரண்டி
சர்க்கரை - அரை தேக்கரண்டி
எலுமிச்சை பழச்சாறு - 1 தேக்கரண்டி
தக்காளி சாஸ் - 2 தேக்கரண்டி
லவங்கப்பட்டை தூள் - அரை தேக்கரண்டி
பார்பிக்யூ குச்சிகள் - தேவையான அளவு
உப்பு - சுவைக்கு

செய்முறை

அன்னாசி பழத்தை தோல் சீவிய பின்பு நடுவில் இருக்கும் கடினமான சதைப்பகுதியை நீக்கவும்.

பிறகு பழத்தை சதுர வடிவில் துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்

சர்க்கரையை மிக்சியில் போட்டு தூளாக பொடித்து கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் காஷ்மீரி மிளகாய் தூள், மிளகு தூள், சீரகத்தூள், சர்க்கரை, லவங்கப்பட்டை தூள், தக்காளி சாஸ் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

இந்த கலவையில் அன்னாசிப்பழத்துண்டுகளை கொட்டி கிளறவும். பின்பு எலுமிச்சைம் பழச்சாறு ஊற்றி கலக்கவும்.

பாத்திரத்தை காற்று புகாதவாறு மூடி இரவு முழுவதும் குளிர்சாதனப்பெட்டியில் வைக்கவும்.

அடுத்த நாள் காலையில் அன்னாசிப்பழ துண்டுகளை எடுத்து ஒன்றன் பின் ஒன்றாக பார்பிக்யூ குச்சியில் சொருகவும்.

அடுப்பில் கிரில் செய்வதற்கான வாணலியை வைத்து அது சூடானதும் வெண்ணெயை போட்டு உருக வைக்கவும். பின்பு அதில் பார்பிக்யூ குச்சியில் சொருகப்பட்ட பழத்துண்டுகளை நன்கு சிவக்க வறுத்தெடுக்கவும்.

இப்போது சுவையான அன்னாசிப்பழ பார்பிக்யூ தயார்.
Tags:    

Similar News