ஆன்மிகம்
மகிழ்ச்சியின் திருநாள் கிறிஸ்துமஸ்

மகிழ்ச்சியின் திருநாள் கிறிஸ்துமஸ்

Published On 2019-12-25 04:22 GMT   |   Update On 2019-12-25 04:22 GMT
கிறிஸ்துமஸ் இந்த வார்த்தையை உச்சரித்தவுடன் மனதுக்குள் எவ்வளவு பெரிய மகிழ்ச்சி. இந்த மகிழ்ச்சி கடவுள் நமக்கு கொடுத்த கொடை லூக்கா 2: 10-11-ல் இவ்வாறு கூறப்பட்டுள்ளது
கிறிஸ்துமஸ் இந்த வார்த்தையை உச்சரித்தவுடன் மனதுக்குள் எவ்வளவு பெரிய மகிழ்ச்சி. இந்த மகிழ்ச்சி கடவுள் நமக்கு கொடுத்த கொடை.

லூக்கா 2: 10-11-ல் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. வானதூதர் அவர்களிடம் அஞ்சாதீர்கள், இதோ எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று ஆண்டவராகிய ேமசியா என்னும் மீட்பர் உங்களுக்காக தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார். ஆம், மீட்பர் பிறந்த மகிழ்ச்சியின் திருநாள்தான் கிறிஸ்துமஸ்.

ஆதியில் கடவுள் மனிதர்களை படைத்து அவர்களிடம் பல்கி பெருகி உலகத்தை நிரப்புங்கள் என்று ஆசீர்வதித்தார். அத்துடன், இந்த உலகத்தை ஆளும் முழு அதிகாரமும் கொடுத்தார். ஆனால், மனிதன் தனது சொல்லாலும், செயலாலும், சிந்தனையாலும் கடவுளுக்கு எதிராக பாவம் செய்ய தொடங்கினான். பாவத்தினால் மனதில் நிம்மதியின்றி, அமைதியில்லாமல், கொலை, பழிவாங்கும் உணர்வுடன் அலைந்தான்.உலக மக்கள் மீது மிகுந்த அன்பு கொண்ட இறைவன் தனது ஒரே மகனை உலகத்திற்கு அனுப்பி, பாவத்தில் மூழ்கி கிடக்கும் மனிதர்களை நல்வழி படுத்த எண்ணினார்.

இந்த உன்னத பணிக்காக இறைமகன் இயேசு, மனிதனாக பிறந்த நாள்தான் கிறிஸ்துமஸ். உலகிற்கு வந்த இறைமகன் தனது வாழ்வாலும், போதனையாலும் மனித குலத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டார். இயேசு தனது வாழ்நாளில் அன்பின் வழியை போதித்து மக்களை நல்வழி படுத்தினார். இவரது போதனை மனித சமுதாயத்தில் இருந்த பழிவாங்கும் குணங்களை அப்புறப்படுத்தி வருகிறது. உலகம் எங்கும் அன்பு, சமாதானம், நீதி போன்றவற்றை நிலைநாட்டி வருகிறது. பாவத்திலும், பழிவாங்கும் குணத்திலும் அடிமை பட்டு கிடந்த நாம் மகிழ்ச்சியுடன் வாழ வழிகாட்டியவர் இயேசு. அவர் பிறந்த நாள் உண்மையிலேயே நமக்கு மகிழ்ச்சியான நாள் என்றால் மிகையல்ல.

இந்த மகிழ்ச்சியின் திருநாளை கொண்டாடும் மக்கள் வீடுகளில் நட்சத்திரம், மின் விளக்குகளால் அலங்காரம் செய்து, புத்தாடை அணிந்து, கேக், இனிப்பு போன்றவற்றை வழங்கி மகிழ்கிறார்கள். அந்த மகிழ்ச்சியின் திருநாளை நாமும் இணைந்து கொண்டாடுவோம்.
Tags:    

Similar News