செய்திகள்
கோப்புபடம்

திரிபுராவில் பா.ஜ.க. அரசுக்கு எதிராக வருகிற 15-ந்தேதி திரிணாமுல் காங்கிரஸ் பேரணி

Published On 2021-09-11 22:53 GMT   |   Update On 2021-09-11 22:53 GMT
திரிபுராவின் தற்போதைய சூழலை திரிணாமுல் காங்கிரஸ் அரசியல் ஆதாயத்திற்கு பயன்படுத்த கூடாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தெரிவித்துள்ளது.
கவுஹாத்தி:

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுராவில் முதல்-மந்திரி பிப்லப் குமார் தேவ் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடக்கிறது.  சமீபத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு-பா.ஜ.க. கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது.

இதனையடுத்து, அகர்தலாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தொண்டர்கள் தாக்கப்பட்டனர். அக்கட்சியின் இரு அலுவலகங்கள், வாகனங்கள் ஆகியவற்றுக்கு தீ வைக்கப்பட்டது.  இந்த சம்பவத்திற்கு பா.ஜ.க. மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.  இதனை பா.ஜ.க. மறுத்துள்ளது.



இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தொண்டர்கள் மீது தாக்குதல் நடந்ததற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், திரிணாமுல் காங்கிரஸ் பொது செயலர் அபிஷேக் பானர்ஜி தலைமையில் வருகிற 15ந்தேதி, திரிபுராவின் அகர்தலா நகரில் கண்டன பேரணி நடைபெற உள்ளது. 

எனினும், திரிபுராவின் தற்போதைய சூழலை திரிணாமுல் காங்கிரஸ் அரசியல் ஆதாயத்திற்கு பயன்படுத்த கூடாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News