உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

தாராபுரம் ஊராட்சி பகுதியில் வளர்ச்சிப் பணிகளை கலெக்டர் ஆய்வு

Published On 2021-12-03 05:01 GMT   |   Update On 2021-12-03 05:01 GMT
ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜீவானந்தம், பாலு, உதவிப்பொறியாளர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தாராபுரம்:

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட தொப்பம்பட்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் மூலம் ரூ. 10.19 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மையம், நஞ்சியம்பாளையம் ஊராட்சியில் ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம் ரூ. 28.40 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் உயர்நிலை நீர்த்தேக்கத்தொட்டி ஆகியவற்றை மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதைத் தொடர்ந்து நஞ்சியம்பாளையம், சின்னப்புத்தூர் ஆகிய ஊராட்சி அலுவலகங்களில் உள்ள பதிவேடுகள், ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு உருவாக்குதல், கொரோனா நோய் தடுப்பூசி தொடர்பான ஆவணங்களையும் ஆய்வு செய்தார். ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜீவானந்தம், பாலு, உதவிப்பொறியாளர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Tags:    

Similar News