தொழில்நுட்பம்
பப்ஜி மொபைல் இந்தியா

இந்தியாவில் மீண்டும் வெளியாகும் பப்ஜி மொபைல்

Published On 2020-11-13 04:20 GMT   |   Update On 2020-11-13 04:20 GMT
இந்திய சந்தையில் மீண்டும் பப்ஜி மொபைல் கேம் வெளியாக இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


இந்தியாவில் பப்ஜி மொபைல் கேம் மீண்டும் வெளியாக இருக்கிறது. முன்னதாக பப்ஜி மொபைல் கேமிற்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து பப்ஜி கார்ப்பரேஷன் நிறுவனம் கேமினை இந்திய எல்லைக்குள் முழுமையாக முடக்கியது. பின் இந்த கேம் மீண்டும் வெளியாக இருப்பதாக பலமுறை தகவல்கள் வெளியாகி வந்தன.

தற்சமயம் பப்ஜி கார்ப்பரேஷன் பப்ஜி மொபைல் இந்தியா கேமினை இந்திய சந்தையில் வெளியிட இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. இந்த கேம் இந்தியர்களுக்காக கஸ்டமைஸ் செய்யப்பட்டு இருக்கும் என பப்ஜி கார்ப்பரேஷன் அறிவித்து உள்ளது.



இம்முறை பப்ஜி விளையாடும் இளம் கேமர்கள் பரிந்துரைக்கப்பட்ட கேம்பிளே வழக்கங்களில் ஈடுபட கட்டுப்பாடுகள் இருக்கும். மேலும் கேம் விர்ச்சுவல் சிமுலேஷன் டிரெய்னிங் கிரவுண்டில் துவங்கி கேம் கதாபாத்திரங்கள் ஆடை அணிந்து கொள்ளும் வகையில் செட் செய்யப்பட்டு இருக்கும்.

இதுதவிர பப்ஜி கார்ப்பரேஷன் தாய் நிறுவனமான கிராப்டன் இன்க் இந்தியாவில் உள்ளூர் வீடியோ கேம், பொழுதுபோக்கு, இ ஸ்போர்ட்ஸ் மற்றும் ஐடி துறையை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லும் வகையில் 100 மில்லியன் டாலர்களை முதலீடு செய்ய இருப்பதாக தெரிவித்து உள்ளது.
Tags:    

Similar News