செய்திகள்
டேவிட் வார்னர், பிரையன் லாரா

அதிரடியாக விளையாடும் டேவிட் வார்னருக்கு இன்னும் வாய்ப்புகள் உள்ளன: பிரையன் லாரா

Published On 2019-12-01 14:55 GMT   |   Update On 2019-12-01 14:55 GMT
அடிலெய்டு டெஸ்டில் 400 ரன்களை அடிக்க தவறிய வார்னருக்கு இன்னும் வாய்ப்புள்ளதாக பிரையன் லாரா தெரிவித்துள்ளார்.
அடிலெய்டு டெஸ்டில் ஆட்டமிழக்காமல் 335 ரன்கள் அடித்த டேவிட் வார்னர், லாராவின் 400 ரன்கள் சாதனையை முறியடிக்க வாய்ப்பு இருந்தது. ஆனால் ஆஸ்திரேலியா டிக்ளேர் செய்ததால் வார்னரால் சாதனைப் படைக்க முடியவில்லை.

இந்நிலையில் அட்டாக் ஆட்டம் ஆடும் டேவிட் வார்னரால் எனது சாதனையை முறியடிக்க மீண்டும் வாய்ப்பு இருக்கிறது என லாரா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரையன் லாரா கூறுகையில் ‘‘வார்னரின் ஆட்டம் மிகச் சிறந்த இன்னிங்ஸ். ஆஸ்திரேலியா வெற்றியைத்தான் மிகப்பெரியதாக நினைத்தது. சீதோஷ்ணநிலை மிகப்பெரிய பங்கு வகித்ததால் அப்படி ஒரு முடிவை எடுத்தது. ஆனால், ஆஸ்திரேலியா டேவிட் வார்னரை 400 ரன்கள் அடிக்கும் வரை சென்றிருந்தால், நான் மகிழ்ச்சி அடைந்திருப்பேன்.

நான் இங்கே அதை பார்க்க விரும்பினேன். டேவிட் வார்னரிடம் 12 ஓவர்கள் எடுத்துக் கொள்ளுங்கள், தேனீர் இடைவேளைக்குள் 400 ரன்களை கடந்து விட வேண்டும் என்று சொல்லியிருக்கலாம். இது சிறப்பானதாக இருந்திருக்கும்.

2-வது நாள் ஆட்ட முடிவில் பாகிஸ்தானின் 6 விக்கெட்டுக்களை வீழ்த்தியதை நியாயப்படுத்தாலம். இன்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் நீண்ட நேரம் முதல் இன்னிங்சை இழுத்தது. ஆகவே, டிக்ளேர் செய்தது அந்த நேரத்தில் சரியானது.

சர் டொனால்டு பிராட்மேன் சாதனையை முறியடித்ததும், எனது சாதனையை நோக்கி வார்னர் விரைவார் என்று விரும்பினேன். வர்ணனையாளர்கள் ஹெய்டன் சாதனையை முறியடிக்கலாம் எனக் கூறினர். ஆனால், 381 ரன்னைத் தொட்டால், என்னுடைய சாதனையை தொட்டுவிடுவார் என்று நினைத்தேன்’’ என்றார்.
Tags:    

Similar News