செய்திகள்
கோப்புபடம்

தந்தை கண்டித்ததால் வி‌ஷம் குடித்து வாலிபர் தற்கொலை - நண்பர்களுக்கு சிகிச்சை

Published On 2021-08-01 08:21 GMT   |   Update On 2021-08-01 08:21 GMT
நீடாமங்கலத்தில் நண்பர்கள் மூவரும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு அதில் ஒருவர் இறந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர்:

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் காவல் சரகம் கப்பலுடையான் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 26). இவரது தந்தை கார்த்திகேயன். விவசாயம் செய்து வருகிறார். ஆனந்து மற்றும் அவருடைய நண்பர்கள் அசோக்குமார் (26), ஆசைத்தம்பி (28) ஆகிய 3 பேரும் இணைபிரியாத நண்பர்கள். 3 பேருக்கும் திருமணம் ஆகவில்லை. இவர்கள் ஊர் சுற்றி வந்ததோடு தினந்தோறும் மது அருந்தியும் வந்துள்ளனர். இதனை பலமுறை கண்டித்தும் 3 பேரும் திருந்தவில்லை.

இந்நிலையில் ஆனந்தை அழைத்து அவரது தந்தை கண்டித்துள்ளார். இதில் மனவேதனை அடைந்த ஆனந்த் நேற்று இரவு நண்பர்களோடு மது அருந்தும் போது தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக தெரிவித்துள்ளார். இதனை கேட்ட இவரது நண்பர்கள் அசோக்குமா, ஆசைத்தம்பி ஆகிய இருவரும் நீ மட்டும் தற்கொலை செய்துகொள்ள வேண்டாம். மூவரும் சேர்ந்து தற்கொலை செய்து கொள்வோம் என்று கூறி 3 பேரும் மதுவில் பூச்சி மருந்தை கலந்து குடித்துள்ளனர்.

இதனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கிக் கிடந்த மூவரையும் மீட்டு திருவாரூர் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆனந்த் இறந்தார். மேலும் அசோக்குமார், ஆசைத்தம்பி இருவரும் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். நீடாமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News