செய்திகள்
மழை

நெல்லை- தென்காசியில் பரவலாக மழை: அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

Published On 2021-07-15 04:21 GMT   |   Update On 2021-07-15 04:21 GMT
மணிமுத்தாறு அணைக்கு இன்று காலை வினாடிக்கு 65 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 305 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

நெல்லை:

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்றும், இன்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்துள்ளது.

அதிகபட்சமாக அடவிநயினார் அணை பகுதியில் 7 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. சேர்வலாறு அணைப்பகுதியில் 4 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. மற்ற மலைப்பகுதியில் சாரல் மழை தொடர்ந்து பெய்து வருகிறது.

மழை காரணமாக பாபநாசம் அணைக்கு இன்று காலை வினாடிக்கு 916 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 1405 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பாபநாசம் அணை நீர்மட்டம் இன்று காலை 115.15 அடியாக உள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் இன்று காலை 117.45 அடியாக உள்ளது.

மணிமுத்தாறு அணைக்கு இன்று காலை வினாடிக்கு 65 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 305 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் இன்று காலை 75 அடியாக உள்ளது.

இதுபோல கடனாநதி அணை-69.80, ராமநதி- 64, கருப்பாநதி-62.67, குண்டாறு-36.10, அடவிநயினார்-119.50, கொடுமுடியாறு-28.75, வடக்கு பச்சையாறு-16.65, நம்பியாறு-11.93 அடிகளாகவும் நீர்மட்டம் உள்ளது.

குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் நன்றாக விழுகிறது. இதுபோல அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவி, களக்காடு தலையணை அருவி ஆகியவற்றிலும் தண்ணீர் நன்றாக விழுகிறது.

ஆனால் கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக அருவிகளில் குளிக்க அனுமதிக்கப்படவில்லை.

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இன்று காலை வரை பெய்த மழை அளவு விபரம் வருமாறு:-

அடவிநயினார்-7, சேர்வலாறு-4, ஆய்குடி-4, தென்காசி-2.4, குண்டாறு-2, சங்கரன்கோவில்-2, பாபநாசம்-2, கண்ணடியன் கால்வாய்-1.8, கருப்பாநதி-1, அம்பை-1, செங்கோட்டை-1, மணிமுத்தாறு-1.

Tags:    

Similar News