ஆன்மிகம்
தட்சிணாமூர்த்தி

தட்சிணாமூர்த்தி அரிதான கோலத்தில் காட்சி தரும் கோவில்கள்

Published On 2021-01-09 06:58 GMT   |   Update On 2021-01-09 06:58 GMT
கடலூர் ஓமாம்புலியூர் பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் கோவிலில் சுவாமி சன்னிதிக்கும், அம்மன் சன்னிதிக்கும் மத்தியில் மகாமண்டபத்தில் தட்சிணாமூர்த்தி அமர்ந்து அருள்பாலிக்கிறார்.
* அரிதாக சில கோவில்களில் கால்களை மாற்றி மடக்கி வைத்தும், குத்துக்காலிட்ட நிலையிலும் காட்சி தரும் தட்சிணாமூர்த்தி, கடலூர் அருகிலுள்ள தீர்த்தனகிரி சிவக்கொழுந்தீஸ்வரர் கோவிலில் இரண்டு கால்களையும் மடக்கி பீடத்தின் மீது அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். இவருக்கு கீழே முயலகன் இல்லை. நான்கு சீடர்கள் மட்டும் இருக்கின்றனர். 

விவசாய தம்பதியருக்கு அருள் செய்வதற்காக, முதியவர் வேடத்தில் வந்த சிவன் அவர்கள் படைத்த உணவை வயலில் இரண்டு கால்களையும் மடக்கி அமர்ந்து சாப்பிட்டுச் சென்றார். இதன் அடிப்படையில் இக்கோவிலில் தட்சிணாமூர்த்தி கோலம் இருப்பதாகச் சொல்கிறார்கள். இவரை ‘தவ தட்சிணாமூர்த்தி’ என்று அழைக்கிறார்கள். இவரிடம் வேண்டிக்கொண்டால் உணவிற்கு பஞ்சம் இல்லாத நிலை ஏற்படும், விவசாயம் செழிக்கும் என்பது நம்பிக்கை.

கடலூர் ஓமாம்புலியூர் பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் கோவிலில் சுவாமி சன்னிதிக்கும், அம்மன் சன்னிதிக்கும் மத்தியில் மகாமண்டபத்தில் தட்சிணாமூர்த்தி அமர்ந்து அருள்பாலிக்கிறார். உமாதேவியாருக்கு பிரணவ மந்திரத்தின் பொருளை சிவன் உபதேசித்ததால், இது குருமூர்த்தி தலமாக கருதப்படுகிறது. குருவுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இத்தலத்தில் மற்ற நவக்கிரகங்கள் கிடையாது. இப்படிப்பட்ட அமைப்பு தமிழகத்தில் வேறு எங்கும் இல்லை.

* சிதம்பரத்துக்குத் தென்கிழக்கில் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிவபுரி என்னும் திருநெல்வாயை அடுத்துள்ள மேலை திருக்கழிப்பாலை திருத்தலத்தில் அமைந்துள்ள தட்சிணாமூர்த்தி, காசியில் இருந்து கொண்டுவரப்பட்ட பளிங்குக்கல்லால் உருவானவர்.

* சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வடதிசையில் உள்ள ஆத்மநாதசுவாமி கோவிலில் தட்சிணாமூர்த்தி யோகநிலையில் அருள்பாலிக்கிறார்.
Tags:    

Similar News