உள்ளூர் செய்திகள்
ஜல்லிக்கட்டு போட்டியில் சீறி வந்த காளையை அடக்க முயன்ற வீரர்கள்

சித்ரா பவுர்ணமியையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி

Published On 2022-04-16 10:12 GMT   |   Update On 2022-04-16 10:12 GMT
திருமலைசமுத்திரத்தில் சித்ரா பவுர்ணமியையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் அருகே உள்ள திருமலை சமுத்திரத்தில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில்

இருந்து நேற்றிரவே காளைகள் கொண்டு வரப்பட்டன.  மொத்தம் 750 காளைகள் பதிவு செய்யப்பட்டிருந்தது. 350 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். ஜல்லிக்-கட்டை எம்.எல்.ஏ.க்கள் துரை

சந்திரசேகரன்,டி.கே.ஜி.நீலமேகம், கோட்டாட்சியர் ரஞ்சித் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். முன்னதாக மாடுபிடிவீரர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டு இந்த போட்டியில் கலந்து
 
ண்டனர். மேலும் போட்டியில் பங்கேற்ற காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.போட்டியில் வாடிவாசல் வழியாக காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து

விடப்பட்டன. காளைகள் துள்ளி குதித்து சீறிப் பாய்ந்து  களத்தில் நின்று விளையாடியது. பல காளைகள் தன்னை அடக்க முயன்ற வீரர்களை முட்டி தூக்கி வீசியது. இருந்தாலும் வீரர்கள் மனம் தளராமல்

போராடி காளைகளின் திமிலை பிடித்து அடக்கினர்.  அப்போது பார்வையாளர்களை உற்சாகப்படுத்தி கரவொலி எழுப்பினர். காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாமல் இருந்த

காளைகளின் உரிமையாளர்களுக்கும் உடனுக்குடன் பரிசுகள் வழங்கப்பட்டன. காளைகள் முட்டியதில் 17-க்கும் மேற்பட்ட வீரர்கள், பார்வையாளர்கள் காயம் அடைந்தனர். இதில் லேசான காயம்

அடைந்தவர்களுக்கு அங்கேயே முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பலத்த காயம் அடைந்தவர்கள் தஞ்சை மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து ஜல்லிக்கட்டு

விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் தாசில்தார் மணிகண்டன், திருமலை சமுத்திரம் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேஷ், கவுன்சிலர் ராஜகோபால் மற்றும் பொதுமக்கள்

ஏராளமானோர் கலந்துகொண்டு ஜல்லிக்கட்டை ரசித்தனர்.வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு பிருந்தா,  ஏ.டி.எஸ்.பி. ரவீந்திரன் ஆகியோர் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார்

பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்-டுள்ளனர்.
Tags:    

Similar News