செய்திகள்
கொரோனா வைரஸ்

கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிப்பதை பொறுத்தே 3-வது அலை அமையும்: நிபுணர்கள் கருத்து

Published On 2021-09-18 02:18 GMT   |   Update On 2021-09-18 02:18 GMT
பெரிய கூட்டங்கள் போன்ற சூப்பர் பரவலுக்கு வழிவகுக்கும் நிகழ்வுகள் தான் 3-வது அலையை தீர்மானிக்கும் காரணியாக இருக்கலாம் என எய்ம்ஸ் இயக்குனர் ரந்தீப் குலேரியா தெரிவித்தார்.
புதுடெல்லி :

இந்தியாவில் கொரோனாவின் 3-வது அலை குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதில் முக்கியமாக வருகிற பண்டிகை காலங்களை குறித்து அவர்கள் கடும் எச்சரிக்கை விடுத்து இருக்கிறார்கள்.

இது குறித்து தேசிய நோய்த்தடுப்புக்கான தொழில்நுட்ப ஆலோசனைக்குழுவின் கொரோனா பணிக்குழு தலைவர் டாகடர் என்.கே.அரோரா கூறுகையில், ‘வருகிற நாட்களில் விரைவான தடுப்பூசி பணிகள் மற்றும் கொரோனாவின் புதிய மாறுபாடு தோன்றாத சூழலில், எதிர்வரும் பண்டிகை காலங்களில் மக்கள் கொரோனா தடுப்பு நடைமுறைகளை கடைப்பிடிப்பதை பொறுத்தே 3-வது அலை அமையும்’ என்று தெரிவித்தார்.

இதைப்போல நாட்டில் தற்போது கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து வருவதாக கூறியுள்ள எய்ம்ஸ் இயக்குனர் ரந்தீப் குலேரியா, இருப்பினும் வரவிருக்கும் பண்டிகை காலம் மற்றும் அதனுடன் தொடர்புடைய கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், பெரிய கூட்டங்கள் போன்ற சூப்பர் பரவலுக்கு வழிவகுக்கும் நிகழ்வுகள் ஆகியவைதான் 3-வது அலையை தீர்மானிக்கும் காரணியாக இருக்கலாம் என தெரிவித்தார்.

Tags:    

Similar News