ஆன்மிகம்
கொண்டையம்பாளையத்தில் அய்யா வைகுண்டர் சிவபதி தேர் திருவிழா

கொண்டையம்பாளையத்தில் அய்யா வைகுண்டர் சிவபதி தேர் திருவிழா

Published On 2021-09-28 08:05 GMT   |   Update On 2021-09-28 08:05 GMT
அய்யா சிவசிவா அரகரா அரகரா என கோஷம் எழுப்பியபடி தேரை வடம்பிடித்து இழுத்து சென்றனர்.தேரின் முன்பு கோலாட்டம் ஆடியபடி சென்றனர்.
கோவை சரவணம்பட்டியை அடுத்த கொண்டையம்பாளையம் வரதய்யங்கார்பாளையத்தில் அய்யா வைகுண்டர் சிவபதி உள்ளது. இங்கு தேர்த்திருவிழா கடந்த 17 -ந் தேதி கொடியேற்றத்து டன் தொடங்கியது. 18-ந் தேதி காலை 6 மணிக்கு உகப்படிப்பு, பணிவிடை, பிற்பகல் 12 மணிக்கு உச்சிப்படிப்பு, இரவு 7.30 மணிக்கு சிறப்பு புஷ்ப அலங்கார பணிவிடை, அய்யா மயில் வாகனத்தில் எழுந்தருளல், 19-ந் தேதி இரவு 7.30 அய்யா பிரம்மனாக வெளிப்பட்டு சரஸ்வதி தேவியுடன் அன்ன வாகனத்தில் எழுந்தருளி பதிவலம் வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

20 -ந் தேதி இரவு 7.30 மணிக்கு அய்யா தொட்டில் வாகனத்திலும்,21-ந்தேதி அய்யா பூஞ்சப்பர வாகனத்தில் எழுந்தருளியும், 22 -ந் தேதி சர்ப்ப வாகனத்திலும், 23-ந் தேதி கருட வாகனத்திலும், 24 -ந் தேதி வெள்ளை குதிரை வாகனத்திலும், 25 -ந் தேதி ஆஞ்ச நேயர் வாகனத்திலும், 26- ந் தேதி இந்திர வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று மதியம் 1 மணிக்கு அய்யா வைகுண்டரை பல்லக்கு வாகனத்தில் எழுந்தருளச் செய்து திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

அய்யா சிவசிவா அரகரா அரகரா என கோஷம் எழுப்பியபடி தேரை வடம்பிடித்து இழுத்து சென்றனர்.தேரின் முன்பு கோலாட்டம் ஆடியபடி சென்றனர். தேரை கோவை நாடார் சங்க செயலாளர் பொன்செல்வராஜ், பெருந்தலைவர் நற்பணி மன்ற தலைவர் வேலுமயில் ஆகியோர் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். அதைத் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழா ஏற்பாடுகளை அய்யா வைகுண்ட சிவபதி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
Tags:    

Similar News