ஆன்மிகம்
கொடி மரத்திற்கு சிவாச்சாரியார் தீபாராதனை காண்பித்த போது எடுத்த படம்.

திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

Published On 2021-03-20 02:51 GMT   |   Update On 2021-03-20 02:51 GMT
திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 27-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.
திருப்புவனத்தில் பிரசித்தி பெற்ற புஷ்பவனேஸ்வரர்- சவுந்திரநாயகி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் நிர்வாகத்தின் கீழ் உள்ளது. மேலும் அப்பர், சுந்தரர், அருணகிரிநாதர், திருஞானசம்பந்தர் போன்றவர்களால் பாடப்பெற்ற சிறப்பு வாய்ந்த தலமாகும்.சிவபெருமானின் 64 திருவிளையாடல்களில் 36-வது திருவிளையாடல் நடைபெற்றது இக்கோவிலின் சிறப்பு.

இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி திருவிழா 11 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டுக்கான பங்குனி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிறகு கொடிமரத்திற்கு பல்வேறு பூஜைகள் செய்து சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருவிழாவை முன்னிட்டு தினமும் பல்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி -அம்பாள் காலை, மாலையில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். வருகிற 26-ந்தேதி சுவாமி-அம்பாளுக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடக்கிறது.

திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக 27-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது. அன்று அலங்கரிப்பட்ட சுவாமி, அம்பாள் தனித்தனி தேர்களில் எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகளில் உலா வருகிறார்கள்.
Tags:    

Similar News