உள்ளூர் செய்திகள்
அதியமான்கோட்டையில் ஸ்ரீசுயம்பு ஓங்காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடந்த போது எடுத்த படம்.

அதியமான் கோட்டையில் கோவில் விழா

Published On 2022-04-15 07:49 GMT   |   Update On 2022-04-15 07:49 GMT
தருமபுரி அடுத்த அதியமான் கோட்டையில் ஸ்ரீ சுயம்பு ஓங்காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
தொப்பூர், 

 தருமபுரி மாவட்டம் அதியமான் கோட்டை பகுதியில் எழுந்தரியுள்ள அருள்மிகு ஸ்ரீ சுயம்பு ஓங்காளியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழா நேற்று கொடியேற்றம், பால்குடம் ஊர்வலம் எடுத்தல் மற்றும் புற்று மண் எடுத்தல் நிகழ்ச்சி தொடங்கியது. 

அதனைத் தொடர்ந்து இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று மங்கள வாத்தியங்கள் முழங்க மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. 
அப்போது கலசத்தில் வைக்கப்பட்டிருந்த புனித நீரானது ஓங்காளியம்மன் மற்றும் கோவில் கலசத்தின் மீதும் ஊற்றப்பட்டு பின்னர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் முன்னாள் சேர்மன் பூக்கடை முனுசாமி, அதியமான் கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் மாரியம்மாள் முனிராஜ், கிராம வளர்ச்சி குழு உறுப்பினர் பிரேம்குமார், நாட்டுக்கவுண்டர் சிவகுமார், ஊர்க்கவுண்டர் சபரி, ஊர்கவுண்டர் சின்னதுரை மற்றும்  பலர் கலந்து கொண்டனர். கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை விழாக் குழுவினர் சிறப்பாக செய்தனர். அதனை தொடர்ந்து கோவிலுக்கு வந்த பக்தர்கள் அனைவருக்கும் அன்ன தானம் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News