செய்திகள்
வரைபடம்

பொன்னை சுற்றுவட்டார கிராமங்களை ராணிப்பேட்டை மாவட்டத்தில் சேர்க்க வேண்டும்- கிராம மக்கள் கலெக்டரிடம் மனு

Published On 2020-01-14 11:19 GMT   |   Update On 2020-01-14 11:19 GMT
வேலூர் மாவட்டம், காட்பாரி வட்டத்தில் உள்ள பொன்னை சுற்றுவட்டார கிராமங்களை ராணிப்பேட்டை மாவட்டத்திலும், சோளிங்கர் வட்டத்திலும் இணைக்க வேண்டும் என வலியுறுத்தி கிராம மக்கள் கலெக்டர் திவ்யதர்ஷினியிடம் மனு அளித்தனர்.

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் திவ்யதர்ஷினி தலைமையில் நடந்தது. அப்போது பொன்னை, கீரைச்சாத்து, ஆவுலரங்கயப்பள்ளி, பாலேகுப்பம் உள்ளிட்ட ஆந்திர மாநில எல்லையோர கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனு:-

வேலூர் மாவட்டம், காட்பாடி ஒன்றியத்தில் இருக்கும் பொன்னை, கீரைச்சாத்து, ஆவுலரங்கயப்பள்ளி, பாலேகுப்பம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் வேலூர் மாவட்ட கலெக்டர் மற்றும் காட்பாடி வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட அலுவலகங்களுக்கு செல்ல சுமார் 40 கி.மீ. தூரம் பயணிக்க வேண்டியுள்ளது.

அதேவேளையில் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகம், சோளிங்கர் வட்டாட்சியர் அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம் ஆகியவை சுமார் 18 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளன.

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று பொன்னை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை வேலூர் மாவட்டத்தில் இருந்து பிரித்து, ராணிப்பேட்டை மாவட்டத்திலும், காட்பாடி வட்டத்தில் இருந்து பிரித்து சோளிங்கர் வட்டத்திலும், காட்பாடி ஒன்றியத்தில் இருந்து பிரித்து சோளிங்கர் ஒன்றியத்திலும் சேர்க்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டிருந்தது.

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாப்பேட்டை வட்டத்தில் இருந்த வேலம் கிராமம், புதிதாக உருவாக்கப்பட்ட சோளிங்கர் வட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த கிராமத்தில் இருந்து சோளிங்கர் வட்டாட்சியர் அலுவலகம் 26 கி.மீ. தூரத்தில் உள்ளது. வாலாஜாப்பேட்டை வட்டத்தில் வேலம் கிராமத்தை மீண்டும் இணைக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, பட்டா பெயர் மற்றும் முதியோர் உதவித்தொகை, புதிய குடும்ப அட்டை, குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோரி 321 மனுக்கள் அளிக்கப்பட்டன. அப்போது கல்வி உதவித்தொகை, ஈமச்சடங்கு நிதி 8 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.

Tags:    

Similar News