செய்திகள்
மோர்சன் ஆர்சர்

ஜாப்ரா ஆர்சரின் சிறந்த ஆட்டம் இன்னும் வெளிப்படவில்லை: மோர்கன்

Published On 2019-09-24 12:09 GMT   |   Update On 2019-09-24 12:09 GMT
ஜாப்ரா ஆர்சரின் சிறந்த ஆட்டம் இன்னும் வெளிப்படவில்லை என்று இங்கிலாந்து ஒருநாள் மற்றும் டி20 அணி கேப்டன் மோர்கன் தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்பை மற்றும் ஆஷஸ் தொடரில் சிறப்பாக விளையாடியதன் மூலம் இங்கிலாந்து கிரிக்கெட் போர்டின் மத்திய ஒப்பந்தத்தில் இடம் பிடித்துள்ளார் ஜாப்ரா ஆர்சர்.

இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணியாக விளங்கும் ஜப்ரா, இன்னும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என இங்கிலாந்து ஒருநாள் மற்றும் டி20 அணி கேப்டன் மோர்கன் தெரிவித்துள்ளார்.

ஜாப்ரா ஆர்சர் குறித்து மோர்கன் கூறுகையில் ‘‘ஜாப்ரா பந்து வீச்சை பார்க்க ஆர்வமாக இருக்கிறது. அவர் மிகவும் வேகமாக பந்து வீசுகிறார். அணிக்கு முக்கிய காரணியாக விளங்குகிறார். எந்தவொரு வகையான கிரிக்கெட்டிலும், எந்தவொரு சூழ்நிலையிலும் அவரால் பந்து வீச இயலும்.

அவரின் முழுத்திறமையையும் நாம் இன்னும் பார்க்கவில்லை. எல்லா நேரங்களிலும் அவர் கற்றுக் கொள்ள விரும்புகிறார்’’ என்றார்.
Tags:    

Similar News