தொழில்நுட்பம்
ஒன்பிளஸ் பட்ஸ் இசட்2

ஏ.என்.சி. அம்சம் கொண்ட புது இயர்பட்ஸ் அறிமுகம்

Published On 2021-10-15 07:07 GMT   |   Update On 2021-10-15 07:07 GMT
ஒன்பிளஸ் நிறுவனம் அறிமுகம் செய்து இருக்கும் புதிய ஒன்பிளஸ் பட்ஸ் இசட்2 ப்ளூடூத் 5.2 கனெக்டிவிட்டி கொண்டிருக்கிறது.


ஒன்பிளஸ் நிறுவனம் ஒன்பிளஸ் 9ஆர்.டி. ஸ்மார்ட்போனுடன் ஒன்பிளஸ் பட்ஸ் இசட்2 வயர்லெஸ் இயர்பட்ஸ்-ஐ அறிமுகம் செய்தது. இந்த இயர்பட்சில் ஏ.என்.சி., 38 மணி நேர பேட்டரி பேக்கப், ப்ளூடூத் 5.2 மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்த இயர்பட்சில் அழைப்புகளை மேற்கொள்வது, ஏ.என்.சி. எனப்படும் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் போன்ற அம்சங்களை இயக்குவதற்கு மூன்று மைக்ரோபோன்கள் உள்ளது. ஏ.என்.சி. மட்டுமின்றி இந்த இயர்பட்ஸ் டிரான்ஸ்பேரன்சி மோட் மற்றும் 94 எம்.எஸ். லோ லேடென்சி மோட் கொண்டிருக்கிறது.



ஒன்பிளஸ் பட்ஸ் இசட்2 மாடல் 40 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இது முழு சார்ஜ் செய்தால் 7 மணி நேர பேட்டரி பேக்கப் வழங்குகிறது. இதன் சார்ஜிங் கேஸ் 520 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டிருக்கிறது. இது 38 மணி நேர பேட்டரி பேக்கப் வழங்கும். 

சீன சந்தையில் ஒன்பிளஸ் பட்ஸ் இசட்2 CNY499 (ரூ. 5840) என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த இயர்பட்ஸ் டே வைட் மற்றும் நைட் பிளாக் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.
Tags:    

Similar News