தமிழ்நாடு
குழந்தைகள்

திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் புத்தாண்டில் 19 குழந்தைகள் பிறந்தது

Published On 2022-01-03 07:35 GMT   |   Update On 2022-01-03 07:35 GMT
திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் கடந்த வருடம் மட்டும் 6412 குழந்தைகள் பிறந்துள்ளது.
திருப்பத்தூர்:

திருப்பத்தூர் மருத்துவ மனையில் ஆங்கில புத்தாண்டையொட்டி நள்ளிரவு 12 மணிமுதல் 19 குழந்தைகள் பிறந்தது. இதில் 6 ஆண் குழந்தைகள் 13 பெண் குழந்தைகள் பிறந்தது.

இதுகுறித்து திருப்பத்தூர் மருத்துவ அலுவலர் டாக்டர் குமரவேல் கூறியதாவது;-

திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் கடந்த வருடம் மட்டும் 6412 குழந்தைகள் பிறந்துள்ளது. ஒவ்வொரு மாதமும் சராசரியாக 500 முதல் 600 குழந்தைகள் பிறக்கிறது. கடந்த 31-ந்தேதி இரவு 12 மணி முதல் ஆங்கில புத்தாண்டு முதல் தினத்தில் 19 குழந்தைகள் பிறந்தன. தமிழ்நாட்டிலேயே தாலுகா அளவிலான மருத்துவமனைகளில் சிறந்த மருத்துவமனை 2-வது பரிசு பெற்றுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

உடன் குழந்தைகள் நல பிரிவு மருத்துவர் டாக்டர் செந்தில்குமரன், டாக்டர் வேல்முருகன் உடனிருந்தனர்.
Tags:    

Similar News