உள்ளூர் செய்திகள்
பாதயாத்திரை செல்லும் பக்தர்களிடம் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்திய போது எடுத்த படம்.

பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் இரவு நேர பயணத்தை தவிர்க்க வேண்டும் - திருப்பூர் மாவட்ட போலீசார் அறிவுறுத்தல்

Published On 2022-01-13 06:42 GMT   |   Update On 2022-01-13 06:42 GMT
பகலில் நடந்து செல்வோர், ரோட்டின் இடது புறத்தில், கூட்டாக செல்லாமல், ஒருவர் பின் ஒருவராக வரிசையில் செல்ல வேண்டும்
திருப்பூர்:

கேரள மாநிலம், கோவை, நீலகிரி, ஈரோடு சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள், உடுமலை, தாராபுரம், காங்கேயம் மார்க்கமாக செல்கின்றனர். இவர்கள், பெரும்பாலும், தேசிய நெடுஞ்சாலை ஓரமே, நடந்து செல்கின்றனர்.

பகலில் வெயிலின் தாக்கம் இருக்கும் என்பதால், அதிகப்படியானோர் இரவு நேரத்தில் பயணத்தை மேற்கொள்கின்றனர். இவர்களின் செயல், ரோட்டில் அதிகவேகமாகச் செல்லும் வாகன ஓட்டுனர்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. 

பக்தர்களின் பாதுகாப்பு கருதி, இரவுப் பயணத்தை தவிர்க்க வேண்டுமென திருப்பூர் மாவட்ட போலீசார் பல்வேறு இடங்களில் இன்று பாதயாத்திரை செல்லும் பக்தர்களிடம் அறிவுறுத்தி வருகின்றனர்.

சீதோஷ்ண நிலை மாற்றத்தில், இரவில் பனி மூட்டம் காணப்படுகிறது. இதனால், ரோடுகளும், வாகனங்களும் எளிதில் புலப்படுவதில்லை. பகலில் நடந்து செல்வோர், ரோட்டின் இடது புறத்தில், கூட்டாக செல்லாமல், ஒருவர் பின் ஒருவராக வரிசையில் செல்ல வேண்டும்.

தவிர்க்க முடியாமல் இரவில் சென்றால், சிவப்பு அல்லது மஞ்சள் நிற ‘ரிப்ளக்டர் ஸ்டிக்கர்’ கொண்ட மேலாடை, தொப்பி, வாக்கிங் ஸ்டிக், தோள் பை அணிந்தால், வாகன ஓட்டிகள் எச்சரிக்கையாக இருப்பர். என பக்தர்களிடம் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News