செய்திகள்
பஸ் நிலையத்தை நகராட்சி தூய்மை பணியாளர்கள் சுத்தம் செய்த போது எடுத்த படம்.

சிவகாசியில் தற்காலிக மார்க்கெட் பஸ் நிலையத்தில் அமைக்க ஏற்பாடு

Published On 2021-05-17 00:49 GMT   |   Update On 2021-05-17 00:49 GMT
சிவகாசியில் தற்காலிக மார்க்கெட் பஸ்நிலையத்தில் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சிவகாசி:

கொரோனா பரவல் காரணமாக சிவகாசியில் இயங்கி வந்த அண்ணாகாய்கறி மார்க்கெட் அண்ணாமலை-உண்ணாமலை நகராட்சி மேல்நிலைப்பள்ளியிலும், உழவர்சந்தையிலும் அமைக்க நகராட்சி நிர்வாகம் முடிவு செய்து அதற்கான ஆரம்ப கட்ட பணிகளை செய்தது.

இந்த நிலையில் சிவகாசியில் கடந்த 3 நாட்களாக மழை விட்டு, விட்டு பெய்ததால் அண்ணாமலை-உண்ணாமலை பள்ளி மைதானத்தில் மழைநீர் தேங்கி அங்கு தற்காலிக காய்கறிகடை அமைக்க முடியாத நிலை ஏற்பட்டது.

இதை தொடர்ந்து வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று சிவகாசி நகராட்சி நிர்வாகம் தற்காலிக மார்க்கெட்டை சிவகாசி பஸ் நிலையத்துக்கு மாற்றிக்கொள்ள அனுமதி வழங்கி உள்ளது.

இந்தநிலையில் இன்று (திங்கட்கிழமை) முதல் தற்காலிக மார்க்கெட் பஸ் நிலையத்திலும், உழவர்சந்தையிலும் இயங்கும் என நகராட்சி நிர்வாகம் சார்பில் நேற்று அறிவிக்கப்பட்டது. இதற்காக நகராட்சி ஊழியர்கள் நேற்று காலை பஸ் நிலையத்தை சுத்தப்படுத்தி அங்கு 70 வியாபாரிகள் கடை நடத்த வசதியாக இடம் ஒதுக்கி அடையாளப்படுத்தி சம்பந்தப்பட்ட வியாபாரிகளுக்கு உரிய தகவல் தெரிவித்தனர்.

பஸ் நிலையத்தில் இடம் ஒதுக்கப்பட்ட வியாபாரிகள் மட்டும் பஸ் நிலையத்தில் வியாபாரம் செய்யலாம். மற்றவர்கள் உழவர்சந்தையில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக மார்க்கெட்டில் வியாபாரம் செய்யலாம் என்று நகராட்சி கமிஷனர் பார்த்தசாரதி தெரிவித்துள்ளார்
Tags:    

Similar News