செய்திகள்
அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

திருச்சியில் புதிதாக ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் - பட்ஜெட்டில் அறிவிப்பு

Published On 2021-08-13 06:53 GMT   |   Update On 2021-08-13 09:45 GMT
அரசு தற்போதைய பேருந்து நிலையங்களை நவீனப்படுத்தி ஒருங்கிணைந்த பேருந்து நிலையங்களாக தரம் உயர்த்தும் என பட்ஜெட் உரையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை:

பட்ஜெட் உரையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாவது:-

மக்கள் சேவையில் மாநகராட்சி, நமது சேவையில் நகராட்சி திட்டங்கள் மூலமாக அனைவருக்கும் இணையவழி சேவைகள் வழங்குவது உறுதி செய்யப்படும். நகர்புற உள்ளாட்சி அமைப்புகள், வரியற்ற பிற வருவாய் அதிகரிக்க தற்போது இருக்கும் சொத்துக்களின் மதிப்பை கூட்டுவதன் மூலம் வரும் வருவாயை வைத்து நவீன பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள், சமுதாயக்கூடங்கள் உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.


இந்த அரசு தற்போதைய பேருந்து நிலையங்களை நவீனப்படுத்தி ஒருங்கிணைந்த பேருந்து நிலையங்களாக தரம் உயர்த்தும். திருச்சியில் புதிதாக ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் மற்றும் வணிக வளாகம் ஏற்படுத்தப்படும்.

இதையும் படியுங்கள்...சீனாவில் பலத்த மழைக்கு 21 பேர் பலி

Tags:    

Similar News