செய்திகள்
மழை

புரெவி புயல் ஆபத்து நீங்கினாலும் கேரளா முழுவதும் பரவலான மழை

Published On 2020-12-05 09:04 GMT   |   Update On 2020-12-05 09:04 GMT
புரெவி புயல் ஆபத்து நீங்கினாலும் கேரளா முழுவதும் லேசான மழை பெய்தது.

திருவனந்தபுரம்:

வங்க கடலில் உருவான புரெவி புயல் தமிழகத்தில் கரையை கடக்கும் போது கேரளாவிலும் மிக பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது.

வானிலை மைய எச்சரிக்கையை தொடர்ந்து கேரளா முழுவதும் புயல் தடுப்பு முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தாழ்வான பகுதிகளில் இருந்தவர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர்.

அவர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். தேசிய பேரிடர் மீட்பு படையினரும் வர வழைக்கப்பட்டு தயார் நிலையில் இருந்தனர்.

புரெவி புயல் கரையை கடந்த போது கேரளா முழுவதும் லேசான மழை பெய்தது. பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. இந்த நிலையில் புரெவி புயலின் தாக்கம் காரணமாக கேரளா முழுவதும் அடுத்த ஒருவாரத்திற்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

மழை ஆபத்து நீங்கியதை அடுத்து நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்ட மக்கள் இன்று வீடு திரும்பலாம் என அரசு அறிவித்து உள்ளது. அதே நேரம் தாழ்வான பகுதிகளில் குடியிருப் போர் பாதுகாப்புடன் இருக்கும் படியும் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

Tags:    

Similar News