ஆட்டோமொபைல்
கியா செல்டோஸ்

2021 கியா செல்டோஸ் இந்திய வெளியீட்டு விவரம்

Published On 2021-04-03 10:15 GMT   |   Update On 2021-04-03 10:18 GMT
கியா மோட்டார்ஸ் நிறுவனம் 2021 செல்டோஸ் மாடலை இப்படி தான் அறிமுகம் செய்யும் என தகவல் வெளியாகி உள்ளது.


கியா மோட்டார்ஸ் நிறுவனம் தனது மேம்பட்ட செல்டோஸ் மாடலை ஏப்ரல் 27 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய காம்பேக்ட் எஸ்யுவி கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின்  புது லோகோ கொண்டிருக்கும். இந்த ஆண்டு துவக்கத்தில் கியா மோட்டார்ஸ் தனது புதிய லோகோவை அறிமுகம் தெய்தது. 



2021 செல்டோஸ் மாடலில் பானரோமிக் சன்ரூப் வழங்கப்படாது என கூறப்படுகிறது. இது பற்றிய கேள்விக்கு கியா மோட்டார்ஸ் சார்பில் எந்த தகவலும் வழங்கப்படவில்லை. புதிய செல்டோஸ் மாடல் கிரெட்டா, டாடா ஹேரியர், புது எம்ஜி ஹெக்டார் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

இந்திய  சந்தையில் கியா செல்டோஸ் மாடல் விலை ரூ. 9.89 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் ரூ. 16.89 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 
Tags:    

Similar News