லைஃப்ஸ்டைல்
ஆழ்மனதில் அமைதியை கொடுக்கும் தியானம்

ஆழ்மனதில் அமைதியை கொடுக்கும் தியானம்

Published On 2020-08-08 03:13 GMT   |   Update On 2020-08-08 03:13 GMT
இன்றைய வாழ்க்கையில் தியானம், யோகா, மூச்சுபயிற்சி இதில் ஒன்றையாவது நாம் பின்பற்றாவிட்டால் உடல், மன வலிமை குன்றி விடுவோம்.
இன்றைய மனித வாழ்க்கை முறைகளும், மனதில் தோன்றும் எண்ணங்களும் அவர்களுக்கு மன அழுத்தம், குற்றவுணர்வு, நிறைவேறாத தொடர் ஆசைகள் போன்றவற்றை ஏற்படுத்துவதாக உள்ளன. நம் உறவுகள் கற்றுத்தர மறந்த உயர்ந்த பண்புகள், ஆரோக்கியமான வாழ்க்கை, உடல் வலிமை, ஒன்று கூடி வாழ்ந்து மகிழ்ந்து கொள்ளுதல், சரியான நேரத்திற்குள் நம் செயல்களை செய்தல் போன்ற திறன் பெற தியானம் செய்வது அவசியம்.இப்புவி மூன்றில் ஒரு பகுதி நீரை கொண்டுள்ளது. ஆனால் நாம் பயன்படுத்த உகந்த நீராக பெரும்பான்மையானது இல்லை. இந்த ஒரு பங்கு நிலத்திலும் எங்கு பார்த்தாலும் நீர்நிறைந்த ஊருணிகள், ஏரிகள், ஆறுகள் என பழைய காலத்தில் தான்இருந்தன. ஆனால் இப்போது நீர் ஊற்றுகள் நுாற்றுக்கணக்கான அடி ஆழத்தின் கீழ் சென்று விட்டன. மனிதனின் சுயநலத்தால் 20 அடிக்கு ஒரு போர் என பூமியை ஒவ்வொரு நாளும் துளையிட்டு கொண்டிருக்கின்றனர்.

பொதுவாக சூரியன் உதயத்திற்கு முன் தியானத்தை முடித்து கொள்ள வேண்டும். இயற்கை சமச்சீராக இருக்கும் தருணம் அதுவே. அந்தி சாயும் மாலை நேரமும் உகந்த தருணம். சூரியன் மறைந்து நிலவு தோன்றும் நேரம் தியானம் செய்ய உகந்த நேரம். நாம் எதையாவது செய்வதற்கு முன் நமக்கு என்ன லாபம் கிடைக்கும் என மனித மட்டத்தில் ஒரு கேள்வி வரும். தியானம் செய்தால், எனக்கு உடனடியாக என்ன கிடைக்கும் என நண்பர்கள் வேடிக்கையாக கேட்பது உண்டு.

தியானம் ஆழ்மனதில்அமைதியை கொடுக்கும். இந்த அமைதி அனைத்தையும் மாற்றி அமைக்கும் அற்புதம். நாம் அமைதியாக இருக்கும் போது ஒரு ஆற்றல் பெருக்கெடுக்கும். அந்த ஆற்றல் நம் இதயப்பகுதியில் இருக்கும் ரத்த நாளங்களில் ரத்தம் சீராக பாயச் செய்கிறது. உடல் முழுவதும் பாயக்கூடியது ரத்தம் ஒன்றே. இந்த ரத்தம் ஓட்டம் அனைத்து ஹார்மோன்களையும் சுரக்க துாண்டுகிறது. இதனால் எலும்பு மஞ்சைகள் சுரந்து உடல் வலி, மூட்டுவலி எலும்பு தேய்மானம் போன்ற அனைத்தையும் சரி செய்கிறது.

மனிதனுக்குள் புதைந்துள்ள நோய் எதிர்ப்பு சக்தியை துாண்டி விட உதவுகிறது. இதனால் மனிதன் எந்த நோயிலும் மாட்டிக் கொள்ள மாட்டான். ஆழ்ந்த துாக்கம் இல்லாத மனிதர்கள் 80 சதவீதம் உள்ளனர். தியானம் ஆழ்ந்த உறக்கத்தை கொடுக்கும். எதை வேண்டுமானாலும் பணத்தால் வாங்கும் சக்தி படைத்த மனிதா, உன்னால் நிம்மதியை வாங்க முடியுமா. அதை தியானம் கொடுக்கும். ஒரு அரசனை போல மகிழ்ச்சியாக வாழ கற்று தருவதும், எவ்வளவு செல்வங்கள் இருந்தாலும் பிச்சைகாரரை போல இருக்க செய்வதும் தியானம். தியானம் ஆசைகளை குறைத்து ஆனந்தத்தை பெருக்க உதவி செய்யும். உடலில் உள்ள உயர்ந்த சக்திகள் கொண்ட சக்கரங்களை சுழலச்செய்யும் அற்புத ஆற்றல் தியானத்திற்கு உண்டு.குடும்ப வாழ்க்கையைசரியாக வாழ்ந்து கொள்ளவும் பணியினை தொய்வில்லாது செய்யவும் தியானம் உதவி புரியும்.

தொடர்ந்து தியானம் செய்தால் மனம் விரிவடைகிறது. நம் வாழ்க்கை தர்மம் விரிவடைய வாய்ப்பாக அமைகிறது. இன்றைய வாழ்க்கையில் தியானம், யோகா, மூச்சுபயிற்சி இதில் ஒன்றையாவது நாம் பின்பற்றாவிட்டால் உடல், மன வலிமை குன்றி விடுவோம்.
Tags:    

Similar News