செய்திகள்
கோப்புப்படம்.

வெளி மாநில வெங்காயத்தால் உள்ளூர் விவசாயிகள் கண்ணீர்

Published On 2021-07-18 08:13 GMT   |   Update On 2021-07-18 08:13 GMT
இங்கு 15 நாட்களாக வானம் மேகமூட்டம், தூறல் மழையால் வெங்காயம் ஈரம் கோர்த்துள்ளது.
திருப்பூர்:

கர்நாடகா மாநிலம் பெங்களூரு, மைசூரு பகுதியில் இருந்து சின்ன வெங்காயம் திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

மொத்த விலையில் கிலோ  ரூ.40,  சில்லறை விலையில்  ரூ.50க்கு விற்கப்படுகிறது. இதனால்  தாங்கள் பாதிக்கப்படுவதாக உள்ளூர் விவசாயிகள்  தெரிவிக்கின்றனர்.

இது குறித்து உள்ளூர் விவசாயிகள் கூறுகையில்,கர்நாடகாவில் இருந்து காய்ந்த ரக வெங்காயம்  வருகிறது. இங்கு 15 நாட்களாக வானம் மேகமூட்டம், தூறல் மழையால் வெங்காயம் ஈரம் கோர்த்துள்ளது.

மைசூர் வெங்காயம் விலை குறைவு என்பதால் உள்ளூர் வெங்காயத்தை கிலோ  ரூ.35 முதல் ரூ.40க்கு தோட்டங்களில் கேட்கின்றனர். இந்த சீசனில் நல்ல விலைக்கு விற்குமென எதிர்பார்த்திருந்தோம். கோடை மழை கைவிட்டுள்ளது.

தற்போது பெய்யும் மழையால் வெங்காயத்துக்கு எதிர்பார்த்த விலை கிடைப்பதில்லை என்றனர்.
Tags:    

Similar News